Wednesday, July 9, 2014

குந்தியும் தேவவதியும்

 அன்புள்ள ஆசிரியருக்கு,

கடிதம் எழுதி தொல்லைபடுத்த விரும்பவில்லை.
ஆனால் தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.
தேவவதியிடம் குந்தி விதுரரை பற்றி பேசும் பொழுது வேண்டும் என்றே நாணப்பட்டு, தான் விதுரரை கவனித்ததை அவளிடம் பூடகமாக சொல்லி, எதற்காக தேவவதியை நிலை குலையச்செய்கிறாள்?
முந்தைய இரவிலும் விதுரர் குந்தியின் அழகை ரசித்ததில் இருந்தும், குந்தி விதுரரை கவனிப்பதில் இருந்தும் ஏதேதோ கற்பனை செய்ய வைக்கிறது. 
கதை விரிய விரிய மேலும் தெளிவடைய முடியும் என்று எண்ணுகின்றேன். காலம் இருந்தால் உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
மற்றபடி எந்த ஐயங்களும் இல்லை. நாங்கள் அனைவரும் மகாபாரத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். படித்து புரிந்து கொள்வதை விட, கற்பனை செய்ய எங்களை தூண்டும் உங்கள் எழுத்து, தமிழமுதம்.
நன்றிகள் கோடி.

அன்புடன்,
சரவணகுமார்,
துபாய்.


அன்புள்ள சரவணக்குமார்,
குந்தி அரச இலக்கணங்கள் கொண்ட நிமிர்ந்த பெண். தேவவதி ஒரு சாதாரணப்பெண். குந்தி முன் தேவவதி மேலும் சாமானியப்பெண்ணாக உணர்கிறாள். ஆகவே குந்தியை மடக்க முயல்கிறாள். முடிவதே இல்லை. நுட்பமாக குந்தி தேவவதியை வென்று செல்கிறாள். இங்கே பாண்டுவுக்கு ஆண்மையில்லை என அவள் குத்திக்காட்ட குந்தி அங்கே எல்லாமே விதுரன் தான் என சற்றே பூடகமாகச் சொல்லி தேவவதியை நிலைகுலையச் செய்கிறாள். அது பெண்கள் நடுவே நிகழும் ஓர் விளையாட்டு, அவ்வளவுதான்.

ஜெ