Monday, July 7, 2014

தலையா வாலா- ராமராஜன் மாணிக்கவேல்

ஓம் ஸ்ரீமுருகன் துணை
அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
மந்தரமலையை மத்தாக, வாசுகியை கயிறாக் கொண்டு. வாசுகியின் வால்பகுதியை தேவர்களும், தலையைப்பகுதியை அசுரர்களும் பற்றிக்கொண்டு பாற்கடலைக்கடைந்தார்கள்.

வால்பகுதியில் இருந்த தேவர்களுக்கு குளிர்மேகங்கள் நிழலும், இளம்மழையும்தர அவர்கள் சோர்வற்று சுகமாகவும், தலைப்பகுதியில் இருந்த அசுரர்களின் மீது வாசுகியின் விஷமூச்சு அக்கியினி குழம்பாக அவர்களைத் தாக்க உடல்கறுத்து, மெலிந்து வாயில் நுரைத்தள்ள பாற்கடலைக் கடைந்தார்கள் என்பதுதானே புரணாங்கள் காட்டும் காட்சி.

நீங்கள் ”சிவன் வாசுகியை விண்ணுக்குத்தூக்கி பாலாழிக்கு மேல் இருந்த மந்தர மலையை கட்டினார்.அதன் தலையை தேவர்களும் வாலை அசுரர்களும் பற்றிக்கொண்டனர்” என்று காட்டி உள்ளீர்கள்.
“அசுரர்களின் மூக்கிலிருந்தும் வாயில் இருந்தும் நுரைகொட்டியது” என்றும் கூறி உள்ளீர்கள்.
இது அறியாமையால், அறிந்துக்கொள்ள கேட்டதே! இப்படியும் இருக்கலாமோ என்ற எண்ணத்தின் வெளிப்பாடு மட்டும்.

நன்றி
வாழ்க வளமுடன்.
அன்புள்ள
ஆர்.மாணிக்கவேல்