Monday, October 27, 2014

ஐவர்




அன்புள்ள ஜெமோ சார்,

நலம்தானே?

பிரயாகை அற்புதமாகச் சென்றுகொண்டிருக்கிறது. நேற்றுமுழுக்க அதிலுள்ள கதாபாத்திரங்களைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்

தருமன் அறம் என்ன என்று படித்து அறிந்தவன். அதை மனசுக்குள் போட்டு உழப்பிக்கொண்டே இருக்கிறான். அறத்துக்கும் நடைமுறைக்கும் இடையே இருக்கிற தூரம்தான் அவனுடைய பிரச்சினை. அறம் வேண்டுமென்றும் நினைக்கிறான். ஆசாபாசங்கள் உடைய மனுஷனாகவும் இருக்கிறான்

அர்ச்சுனன் அறம் பற்றி கவலைப்படவில்லை. அவனுக்கு தன்னுடைய புகழும் வெற்றியும் முக்கியம். நாடுகூட முக்கியம் இல்லை. வெற்றிதான் முக்கியம். வெற்றிபெற்று பெரிய ஆளாக ஆகக்கூடிய டீன் ஏஜ் பையன்கள் எப்படி ஒருவெறியோடும் கர்வத்தோடும் இருப்பார்களோ அப்படி இருக்கிறான்

கர்ணன் தன் வலிமை மேல் நம்பிக்கை கொண்டவனாகவும் தன்னுடைய தகுதிக்குரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டது என நம்புகிறவனாகவும் இருக்கிறான்

பீமன் மனம்புண்பட்ட ஒரு மனிதனாக இருக்கிறான். மனிதவாழ்க்கை மேல் பெரிய கசப்பு இருக்கிறது. மனிதர்கள் அனைவரையும் சந்தேகமாக்ப் பார்க்கிறான்

துரியோதனன் முழுக்கமுழுக்க புண்பட்ட கர்வ்ம் கொண்டவன். அதைத்தவிர நினைப்பே இல்லை. ஆனால் பெருந்தன்மையானவன்

இந்த கதாபாத்திரங்கள்தான் இனிமே ல்வரும் கதை நகரப்போகிறது. ‘ஜெட்வேகம்’ என்பார்களே அப்படி இருக்கிறது


ராமச்சந்திரன்