Wednesday, October 22, 2014

வண்ணக்கடல் -குந்தி- ராமராஜன் மாணிக்கவேல்


வண்ணக்கடல்-3-ஜுன்-03-2014

சூதர்களுக்கும் தூதுவர்களுக்கும் இடையில் உள்ள ஆறு வேற்றுமைகளை சுட்டச்சொன்னால் உண்மையை சொல்லாக்குபவர்கள் தூதுவர்கள்.சொல்லை உண்மையாக்குபவர்கள் சூதர்கள் என்ற முதல் வேற்றுமையிலேயே மீது ஐந்து வேற்றுமைகளும் இருப்பதை யாரும் சுட்டிவிடுவார்கள்.
தொகச்சொல்லி தூவாத நீக்கி நகச்சொல்லி


நன்றி பயப்பதாம் தூது  -என்று வள்ளுவர் தூதுவனுக்கு காட்டும் இலக்கணம்தான் சூதனுக்கும் உரியது. ஆனால் சூதன் நீக்க வேண்டிய எதையும் நீக்காமல் தனது சொல்மாலையில் அதையும் ஒரு அலங்கார காட்சியாக்கிவிடுகின்றான்.

மேலோட்டமாகப்பார்த்தால் கர்ணனின் பிறப்பு ரகசியம் இங்கு உடைவதுபோல்தான் உள்ளது ஆனால் உடையவில்லை.

குந்தியின் முதல் மகன் பிறப்பை வாசகரும் சிலரும் அறிந்து இருக்கிறார்கள், மற்றவர்கள் அறிந்தாலும் அவை நம்பும்படியாக இல்லைஇந்த சூதர்களுக்கு புறணி பேசுவதை தவிர வேறு வேலை இல்லை”  என்று மனதில் நினைத்துக்கொண்டு உதட்டில் சிரிக்கிறார்கள்

வண்ணக்கடல் உதித்ததில் இருந்து மிதந்து மிதந்து வரும் நகையலைகள் இன்று சுழித்து தனது உயரத்தை காட்டுகின்றது.

அஸ்தினபுரிநெருங்குவதுஎனக்குஎப்படித்தெரியும்?” 

என்றான்இளநாகன்.“சூதர்கதைகளில்அஸ்தினபுரியைப்பற்றியஉண்மைகூடிக்கூடிவருவதைக்கொண்டுஅதைக்கண்டுபிடிக்கலாம்என்றார்கலிகர்.

உண்மைகள் கல்போல அங்கேயே கிடக்கிறது, வதந்திகள்தான் அலை அலையாய் உலகமுழுதும் பரவுக்கின்றது என்பதை அழகாக சித்தரிக்கும் பகுதி.

கோடிமுறைஅனலில்பொசுங்கிகோடிமுறைஒளியாகமாறிவிரிந்துஅவள்அவனுடன்கூடினாள்யாராவது ஒரு சூதன் சூரியமண்டலத்திற்கு சென்று சூரியன் முன் பாடி இருந்தால் சூரியனுக்கு கோபத்திற்குபதில் சிரிப்புதான் வந்திருக்கும்.

கிராம நாடகத்தில் பப்பூன் பிரிக்கும் பெரிய பொட்டலும்போல சூதர்களின் சொற்கள் பொய் பொய்யாய் பிரிந்து விழுந்தாலும் அதன் ஆதி மூலத்தை எங்கோ ஒரு புள்ளியில் பொதிந்து வைத்தே அவர்கள் அந்த பெரிய பொய் பொட்டலத்தை ஊருக்காக கட்டிப்பிரிக்கிறார்கள்.

சூதர்களின் பாடல்மூலம் பெண்மையின் உயரத்தையும், அகத்தின் விரிவையும் காட்டும் அற்புதத்தை செய்கிறார் திரு.ஜெ.


பெண்ணெனும்ஆணவத்தின்படிகளில்ஏறிஏறிவந்துசேர்ந்தஇடத்தில்எஞ்சுவதுவெறும்அன்னையென்னும்அடையாளம்மட்டுமே


 “பேரறிவின்வழியாகபெரும்பேதைமையைச்சென்றடையும்கனிவைவாழ்த்துங்கள்


நெஞ்சம் நெகிழ வைக்கும் வரிகள்.ஒருபோதும் ஆணால் அடையமுடியாத ஒரு இடம் பேரறிவும் பெரும்பேதைமையும் கலந்து கனியும் நிலை.இந்த நிலையை அடைய முடியாததாலேயே ஆண் சிறுமை உடையவன்தான்


ஆணெனப்படுபவன்ஆணாகஆகும்போதேசிறுமைகொண்டுவிடுகிறான்அன்னை என்னும்  நிலையில் நிற்கையில் விலங்குகூட மிகமிக உயரத்தில் நிற்கின்றது.

ஓவியர் ஷண்முகவேலின் ஓவியம் அற்புதம் என்பது நாம் அறிந்ததுதான் இன்றைய ஓவியம் அதன் குறியீடால் காலத்தை கடந்தது என்பதைக் காட்டுகின்றது.பாண்டிய மன்னன் முகம் தெரியாமல் மீன் தனது முகம் காட்டுவது ஓவிய கவிதை.ஓவியரும் கதையாசிரியரும் இரண்டு அல்ல ஒன்று என்று காட்டும் ஓவியம் இது.


நன்றி