Monday, October 13, 2014

துரியோதனனின் மாற்றம்


[துரியோதனன் பின்னணியின் துச்சாதனந்ன்molee ]


அன்புள்ள ஜெ சார்

வண்ணக்கடல் வாசித்து முடித்ததும் இதை எழுதுகிறேன். வண்ணக்கடலின் அமைப்பு ஆரம்பத்தில் பிடிபடாததாகவே இருந்தது. இளநாகன் அஸ்தினபுரியில் போய் என்ன செய்யப்போகிறான் என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்தது. அப்படி ஒரு எண்ணத்துடன் வாசித்தாலே நாவல் ஆரம்பம் முதல் சிக்கலை அளித்தது என்று பிறகு புரிந்துகொண்டேன்.

வண்ணக்கடலின் highlight ஆன பகுதி என்பது துரியோதனனின் மாற்றம் பற்றிய சித்தரிப்புதான். அதிலுள்ள நுட்பமான  psychology யும் symbolism மும் எத்தனைபேரால் புரிந்துகொள்ளப்பட்டிருக்குமென்று தெரியவில்லை. நான் எங்கும் அதைப்பற்றி எவரும் சொல்லி வாசிக்கவில்லை. aesthetically தமிழிலே எழுதப்பட்ட முக்கியமான இடம் அது. கிளாஸிக்கல் அதேசமயம் மாடர்ன்

பீமனும் துரியோதனனும் ஒரு உடம்பின் இரு பகுதிகள் போல இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் காணும் இடமே அற்புதமானது. துரியோதனன் பீமனைமட்டும்தான் பார்க்கிறான். அவனுடைய உடம்பை மட்டும்தான் என்று சொல்லவேண்டும். ஒரு உடம்பின் ஒரு பாதி இன்னொருபாதியைப் பார்ப்பதுபோல. அதுமட்டும்தான் matter என்பதுபோல

ஆனால் பிறகு உள்ளே ego திரிந்துவிடுகிறது. இரண்டுபேராக ஆகிவிடுகிறது. துரியோதனன் பீமனை வேவுபார்க்க ஆரம்பிக்கிறான். நுட்பமாக அந்த பிரிவு வளர்ந்துகொண்டே போகிறது. உறவுகளில் எப்போதுமே நடப்பது இதுதான். ஒரு சின்ன hairline crack தான் வரும். அதை சரிசெய்ய conscious ஆக முயற்சி செய்துகொண்டே இருப்போம். முயற்சி செய்யசெய்ய அது இன்னும் விரிசலிட்டுக்கொண்டே போகும். பதைப்பாக இருக்கும். ஆனால் ஒரு இடத்தில் வெடித்துப்பிளக்கும்

துரியோதனனுக்கு அந்த கரடியை வெல்லும் சம்பவம் கடைசி எல்லை. அவனுடைய பிரச்சினையே அவனுடைய ego தான். அந்த ego மீதுதான் அடிபட்டுவிட்டது. அதை அவனால் தாங்கிக்கொள்ளமுடியாது. அது அவனுடைய மரணம் மாதிரி.

ஸ்தூணகர்ணனின் சன்னிதியில் அவன் அடைவது ஒரு ego death. அதை வாழ்க்கையில் அடைந்தவர்களுக்கு அது எவ்வளவு பெரிய வதை என்று தெரியும். It is more than a death. ஸ்தூண கர்ணன் சன்னிதியில் அவன் தன்னை அறுத்துப்போட்டு மீண்டுவருகிறான்.

அதன்பிறகு நடக்கும் மாற்றம் அற்புதமானது. அவன் perfect ஆகிவிடுகிறான். கச்சிதம் என்று சொல்லலாமா? கச்சிதமாக இருப்பது மிஷின் மாதிரி ஆவது. க்ரூரமாக ஆவது. அவனில் இருந்த கோணல்தான் கருணை. அதுதான் ஆணில் இருக்கும் பெண் அம்சம். அதுபோய்விடுகிறது. பூரணமான ஆணாக ஆகிவிடுகிறான். ஆகவே அவனைப் பெண்கள் விரும்புகிறார்கள். மிக அழகாக ஆகிவிட்டன் என்கிறார்கள். ஆனால் அவனிடமிருந்த கருணையும் நெகிழ்வும் மறைந்துவிடுகிறது

இந்தமாற்றம் நாம் பல இடங்களில் பார்த்ததுதான். ஒரு மனிதன் எப்படி ராணுவஜெனரலாக ஆகி கோடிக்கணக்கானவர்களைக் கொல்கிறான் என்பதற்கான பதில் இது. கருணை இல்லாத வியாபாரியாக ஆவது இப்படித்தான். என் அனுபவத்தில் பெரும்பாலான extreme persons  இப்படித்தான். நிறைய experts இப்படி இருப்பதைப்பார்த்திருக்கிறேன்

துரியோதனின் மாற்றம் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அவனுடைய personality மாறியதைப்போல ஒரு மாற்றமும் சொல்லமுடியாது.

அற்புதம் ஜெ

அரவிந்தன் .எம்


துரியோதனி

துரியோதனும் துச்சாதனனும்




கேசவமணி மழைப்பாடல் பற்றி
மரபின் மைந்தன் முதற்கனல் பற்றி