Thursday, October 23, 2014

முடிவிலி





அன்புள்ள ஜெ ,

பிரயாகை - அந்த நதியின் சந்திப்பை சேருவதற்குள், நதியின் வேகம் பிரமிக்க வைக்கிறது.  மற்ற நூல்களைப் பற்றி பிறகு கூறுவேன். இபபோது  ஒரு சந்தேகம்.

// இங்கே முடிவிலி வரை அமர்ந்திருக்கவும் சித்தமே //

"முடிவிலி "  என்பதே முடிவு இல்லாததே. இதில் முடிவிலி வரை  என எழுத முடியுமா? பத்து ஆண்டுகள் வரை அல்லது நூறாண்டு வரை என எழுத முடியும். ஆனால் எல்லையே இல்லாதபோது எப்படி முடிவிலி வரை என எழுத முடியும்.
  ==>  "  இங்கே முடிவிலியாய் அமர்ந்திருக்கவும் சித்தமே" <==
இதுதான் சரியா?

அத்தியாத்தின் ஆரம்பத்திலேயே குரல் எழுப்பியமைக்கு வருந்துகிறேன். பிறகு கேட்க நினைத்தால் இந்த வினா என்னை கடந்து போகும். பிரமிப்பு அதிகமாகும் போது வினாக்கள் எழுவதேயில்லை.

நன்றி.

அன்புடன் 
பெருமாள்

அன்புள்ள பெருமாள்

முடிவிலி என்றால் infinity என்பதன் தமிழாக்கம் . until infinity என்ற சொல்லாட்சியின் தமிழாக்கம் முடிவிலிவரை என்பது. [கணிதத்தில் இதைadinfinite என்பார்கள்].
அதை ஒரு முரண்தொடை என தமிழில் இலக்கணம் சொல்லலாம். ஆங்கிலத்தில் ஆக்ஸிமோரன் என்பார்கள்.
பொதுவாக இலக்கியத்துக்கு செய்தித்தாளின் தரப்படுத்தப்பட்ட எளிய மொழிநடை போதுமானதாக இருப்பதில்லை.
வெண்முரசில் மொழி அப்படி பல கலைச்சொற்களை கையாண்டுதான் முன் செல்கிறது. அவை தத்துவத்துறையில்முக்கியமானவை
ஜெ