Tuesday, November 11, 2014

விழா கடிதம் 1

அன்புள்ள ஜெ

விழாவிற்கு,  நான்,ரஞ்சனி, ஸ்ரீதர் வந்திருந்தோம். நிறைவான விழா.

வாழ்த்துக்கள்.

நீலம் - நான்கு பிரதிகளை வாங்கிக் கொண்டேன். நன்றி.

விஜி பாலா வீட்டிற்கு சென்றிருந்தேன் - ஞாயிறு  காலையில் - விஜி அவர்கள் - சந்திப்பு நேற்றே  முடிந்து விட்டது என்றார். அரங்கம் சென்றால் சந்திக்கலாம் என்றார். ஒரு வேளை அங்கு இருப்பீர்களோ என்று எண்ணினேன். நன்றி கூறி விடை பெற்றேன்.

விழா பற்றி..

கிருஷ்ணன் அவர்கள் கூறிய கடோத்கஜன் செய்தி - எங்களுக்கு ஒரு புரிதல் கதவைத் திறந்தது. ராமாயணத்தில் வாலி -  வாலியின் கேள்விகளும் - அதன் வியாக்கியானங்களும் - சற்று கடினமானவை . தற்போது குழுவில் படித்துக் கொண்டு இருக்கிறாம் - அவை கிருஷ்ணன் கூறிய பார்வையில் திடீரென அவிழ்ந்தது. நன்றி.

நாஞ்சில் நாடனின் தக்கன் முறையும், சூர்பனகை மகன் கதையும் - வாழ்தல், பண்பாடு இவைகளுடன் இணைந்த - புதிய சாத்தியங்களை - அவை ஏற்கனவே இருந்தாலும் - மனதில் எழுப்பியது.

அசோகமித்திரன் -  நேரம் நின்று பேசியதே ஒரு நெகிழ்வான ஒரு விஷயம். அவரது அணுகுமுறை - புராண இதிகாசங்கள் பற்றி - புரிந்தது. அவர் மீதான அன்பையும் மரியாதையும் அதிகரித்தது.

இளையராஜாவிற்கு - இயல்பான, புதிரான - நகைச்சவை - விஷ்ணுபுரம் - சிவபுரம். தவிர ஒரு பாடலை - அனைவரையும்  செய்தது - இனிய அனுபவமே.

மகாபாரதம் நிகழ்த்தும் கலைஞர்களுக்கு மரியாதை - அற்புதம் - வெண் முரசு முயற்சிக்கு ஒரு முழுமை தந்தது.

திரு. ஸ்ரீனிவாசன் உரை - மிகச் சிறப்பு - நான் சரியாக கேட்டனா - - தெரியவில்லை - திரௌபதி துகிலுரியப்படும் காட்சி - பக்தி இயக்கத்தின் - தாக்கமாக - வட இந்திய பாரதத்தில் - இல்லை என்பது போல - பெரிய ஆச்சரியமாக இருந்தது. நான் தவறாக கேட்டு இருக்கலாம் என்றே தோன்றியது.

பிரபஞ்சன் - நீலம் பற்றி உரையாடல் -  சற்று திரும்பி கொண்டு பேசியாதால்  சில வார்த்தைகள் காதில் விழவில்லை - அவர் என்ன பேசுகிறார் என்று ஊகிக்க முடிந்தது. நீலத்தில் மூழ்காதவர் உளரோ!

திரிதந்தாகிலும் தேவபிரானிடை திருவுருட் காண்பன் நான் - என்னும் ஆழ்வார் அடி எண்ணத்தில் ஓடுகிறது  

கமலஹாசன் - உரை - அவருக்கு உரித்தான - பணிவு கலந்த நகைச்சுவையுடன்  - சிறப்பாக.

உங்கள் உரை - பின்புலம் மற்றும் சங்கிலித் தொடரான நம் மகாபாரத மரபு பற்றி - புரிந்தது. இது தேவையான அடித்தள முயற்சி என்று தோன்றியது.

வெண் முரசில் பங்குகளித்தோருக்கு சிறப்பு செய்யப் பட்டதும், விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் தொகுப்பும் விழாவை நிறைவு செய்தன.

உங்களை விழா முடிவில் சந்திக்கலாமா என்கிற ஒரு ஆசை. உங்களது விழா  தொடர்பான பொறுப்புக்கள் மிகுந்து இருக்கலாம் என உணர்ந்து  தொந்திரவு செய்ய வேண்டாம் என தோன்றி.. மற்றொரு முறை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் 

அன்புடன் 
முரளி