Friday, November 14, 2014

வண்ணக்கடல் இறுதி- ராமராஜன் மாணிக்கவேல்




திடமானசித்தம்என்பது.கனவிலும், நனவிலும்மாறாதுஇருப்பதுதான்என்பதைஇன்றையஅத்தியாயம்விளக்குகின்றது

கனவில்இழைக்கும்தவறுக்குக்கூடமனிதன்தண்டனைஅனுபவித்துதான்ஆகவேண்டுமா

கனவுவழியாகஇன்றுதுரோணர்குற்றவாளியாவதும்அதற்காகஅவர்கொடுக்கும்விலையும்அவர்வாழ்க்கையையேமாற்றிப்போடுகின்றது.  

பற்றுகபற்றற்றான்பற்றினைஅப்பற்றைப்
பற்றுகபற்றுவிடற்கு

துரோணருக்குமகன்மீதுகொண்டப்பற்றால்அஸ்தினபுரிமீதுபற்றுவந்தது, அஸ்தினபுரிமீதுவந்தபற்றால்அர்ஜுனன்மீதுபற்றுவந்ததுஅந்தப்பற்றுகாரணமேஇல்லாதகண்ணிலேபடாதஏகலைவன்அன்னையின்உயிருக்குகூற்றாகிநின்றது

குருதட்சனையாக துரோணர் கட்டைவிரலை கேட்கும் இடத்தில் அகத்தில் வீழ்ச்சி அடைகிறார்.அதே நேரத்தில் தனது பதவிப்பீடத்தை ஒருபடி மேலே உயர்த்திக்கொள்கின்றார் அல்லது பதவிப்பீடத்தை அசைக்கமுடியாமல் ஆக்கிக்கொண்டார்.

அகம் விண்ணைநோக்கியும், பதவிப்பீடம் மண்ணைநோக்கியும் மனிதனை இழுக்கின்றது.துரோணர் வாழ்க்கையில் இந்த சிக்கல் பெரிதாக உள்ள அளவுக்கு மகாபாரத மாந்தர்களின் வாழ்க்கையில் உள்ள மற்ற மாந்தர்களின் வாழ்க்கையில் இப்படி இல்லை.

கிருபியை மணந்து இமயம்நோக்கி செல்லும் நாள்வரை விண்ணோக்கிய பயனத்தில் இருந்தவர், கிருபியின் மூலம் மண்ணோக்கி வந்தார் அப்படி வந்தவர் வாழ்க்கை யாராவது ஒருவரின் காரணமாக யாரிடமாவது எதையாவது யாசிக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றார். இதற்கு விதி காரணம் என்று சொல்லமுடியாது.தெரிந்தே செய்யும் தவறு என்று சொல்லலாம்.

தப்பு என்பது தவறிசெய்வது.தவறு என்பது தெரிந்து செய்வது.தப்பு செய்தவன் திருந்தியாகனும் தவறு செய்தவன் வருந்தியாகனும் என்ற பாடலை நினைவுப்படுத்துகின்றார்.

துரோணர் செய்யும் தவறுகள் எல்லாம் தெரிந்தே செய்வது.சுருக்கமாக சொன்னால் வெளிச்சத்தில் கண்மூடி நடப்பது.

விதி என்பது இருட்டில் விழிதிறந்து நடந்தும் மோதிக்கொள்வது.
கட்டைவிரலை தட்சணையாககேட்பது வீழ்ச்சியின் முடிவென்றால், மகனின் இறந்த செய்தியை கேட்டப்பின்பு ஆயுதம் எடுக்கமாட்டேன் என்பது எந்தவகையான வீழ்ச்சி.துரோணரின் வீழ்ச்சி முற்றுப்பெறும் இடம் அதுதான்.

வீழ்ச்சி முற்றுப்பெரும் இடத்தில் துரோணர் ஒன்றை சமன்செய்கின்றார்.அது என்ன?

குருதட்சனை பெறும் இடத்தில் எந்த அஸ்தினப்புரியுடன் கட்டுப்பட இந்த வீழ்ச்சியில் விழுகின்றாரோ?அந்த அஸ்தினபுரியை கொலைகளத்தில் வைவிட்டு கைகழுவி கொள்கின்றார். முள்ளை முள்ளால் எடுக்கின்றார் என்றும் சொல்லலாம் அல்லது ஒருநாட்டின் நம்பிக்கையை பெற செய்த சதியை நம்பிக்கை துரோகியாகியும் சதிசெய்கின்றார் என்றும் கொள்ளலாம்.

வண்ணக்கடல்-68
சகுனி என்ற சொல்தரும்பொருள் இன்று மிளிர்கின்றது.

ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்-ஜுலை-2014 இதழில் ஒரு சொற்றொடர் வெண்முரசுயை சகுனியை ஞாபகப்படுத்தியது.

ஸ்புலிங்க சகுனிவத்” (ஸ்புலிங்கப்பறவையின் உபதேசம்) “சாகஸம் மா குரு” (சாசஸம் செய்யாதே)

பெரும்யானையை அடித்து தின்று மரநிழலில் படுத்துத்தூங்கும் சிங்கம் கொட்டாவி விடும்போது அதன் பல்லின் இடுக்கில் சிக்கி உள்ள யானையின் மாமிசத்துணுக்கை அந்த மரத்தின் கிளையில் வாழும் ஸ்புலிங்கப்பறவை சிங்கத்தின் வாயுக்குள் நுழைந்து கொத்தி திங்குமாம். இதைவிட பெரிய சாகஸம் உலகில் இருக்கமுடியுமா? ஆனால் அந்த பறவையின் உபதேசம் சாசஸம் மா குரு“ (சாகஸம் செய்யாதே) என்பது.

இன்று சகுனியின் உபதேசமானது ஸ்புலிங்கப்பறவையின் உபதேசம்போல்தான் உள்ளது.

சகுனி துரியோதனனை கட்டுப்படுத்துகின்றானா?அல்லது அவனின் அடி ஆழத்தில் தீவைக்கின்றானா?
நான் சொல்வது உண்மைஉண்மையை உன்னிடம் நானாவது சொல்லவேண்டுமல்லவா?” என்றார் சகுனி  
உண்மையை உன்னிடம் நானாவது சொல்லவேண்டுமல்லவா? என்ற சகுனியின்  இந்த நானாவதுவார்த்தை துரியோதனின் சிற்பத்தை தூக்கி தலைகிழாக குத்தி நிற்கவைத்து சிலிர்க்க வைக்கின்றது.
நன்றி