Wednesday, November 12, 2014

அக்கிலிஸும் அர்ஜுனனும்

விரிவான பதிலுக்கு நன்றி. காவியின் காரனங்கள் குறித்த தெளிவு மிகவும் அருமை.தொடர்பில்லாதலாத இன்னொன்றையும் நான் கவனித்தேன்.

ஹோமர் எழுதிய இலியாத்தை ஆவலுடன் படித்த போது ஒரு பெரும் மன சோர்வை அடைந்தேன்.

அதில் ஹெக்டரும் அக்கிலீஸும் பொருத காட்சியை வடிக்கும் போது, ஒருவன் கை ஒரு நாள் மேலோங்குவதும்ஒருவன் கை தாழ்வதும் அத்தீனா மற்றும் அவள் சகதெய்வங்களின்  விளையாட்டாக மாறிவிடுவது எனக்குஏமாற்றமேயளித்தது.

அதை ஒப்பிட்டு நோக்கும்போது மகாபாரதத்தின் பாத்திரங்கள் தெய்வத்தின் இயல்பு கொண்டிருந்தாலும்,நடப்பவை அனைத்திலும் காரண காரிய முடிச்சுகளால் சூழப்பட்டிருப்பது ஒருவித ஆச்சரியத்தையும் எழுதியவன் மேல் மரியாதையும்
ஏற்படுத்துகின்றது.

அதே சமயம் அத்தனை முடிச்சுகளையும் தள்ளி நின்று பார்க்கும் போது
 துருவனின் தந்தை அடைந்த "இத்தனை சிறிய பூச்சிக்காகவா அத்தனை பெரிய நுட்பமான பின்னல்கள் கொண்ட வலை" என்ற வியப்பும் உண்டாகிறது.

அந்த நுட்பமான வலைப்பின்னல்களை ஒவ்வொரு வலைநூலாக எடுத்துக்கோர்க்க நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்முயற்சிகளும் பயிற்சிகளும்என்ன என்பதைக்கொஞ்சம் வாசகனான என்னுடன் பகிர்ந்து கொண்டால் நான் பயனடைவேன்.

ஜெய்கணேஷ்.