Saturday, November 15, 2014

வாசகரின் குரல்


மதிப்பிற்குரிய ஜெ சார்,

      வெண்முரசு நூல் விழா,மற்றும் தங்களின் எல்லா பதிவுகளையும் வாசிக்கிறேன்.மிகப்பெரிய ஆளுமைகளின் வாழ்த்துகளின் மத்தியில் நான் வழக்கம்போல தயங்கி மௌனியாகி விட்டேன்.ஒவ்வொரு நாளும் எனக்கு உங்கள் எழுத்துகளுடனே தொடங்குகிறது.வெண்முரசு என்னைப்போன்ற எத்தனையோ வாசகர்களின் மனதில் வாழ்வில் உணர்வில் ஒன்றாகி ஓங்கி நிற்கிறது.என்னைப் போல் உணர்வுகளை உவகையை வெளிப்படுத்தா பல்லாயிரம் வாசகர்கள் உண்டு.

       விமர்சனங்களையும்,தடைகளையும் புறந்தள்ளி முழுமையாய் தங்களின் படைப்பினை முடிக்க என்றும் உங்களுக்கு இறையருள் உண்டு.தங்களின் எழுத்துகளின் பின்னே நாங்கள் இருக்கிறோம்.

   வெண்முரசு எல்லா நூல்களையும் வரும் புத்தகக் கண்காட்சியில் வாங்க எண்ணியுள்ளேன்.

    நன்றி,
                  வாழ்த்துக்களுடன்
                     தீபா,

அன்புள்ள தீபா

நன்றி

வெண்முரசு வாசகர்களுடன் தான் உரையாடிக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள் முக்கியமானவைதான். ஆனால் வாசகர்களின் எண்ணங்களே இம்முயற்சியின் உன்மையான உந்துசக்தி

நன்றி

ஜெ