Wednesday, March 25, 2015

கோபிகைகள்



ஜெ

கிருஷ்ணன் ஏன் அத்தனை பெண்களின் அந்தரங்கமான காதலனாக ஆனான் என்பதை நீங்கள் சொல்லியிருக்கும் இடத்தை வாசித்து வாசித்து பிரமித்துக்கொண்டிருந்தேன். அதை சாத்யகியின் கண் வழியாகச் சொல்வதும் முக்கியமானது. எனென்றால் சாத்யகிக்கு பெண்ணை பார்க்கவே முடியவில்லை. பெண்ணை பார்ப்பதே சங்கடமானது. அவன் அந்த மாபெரும் காதலனை பார்க்கிறான். புரிந்துகொள்ளமுடியாமல் திணறுகிறான்

சாத்யகி ஒருபக்கம் தர்க்கபூர்வமாக காண்கிறான். மறுபக்கம் வேறுவகையில் மயக்கமாக எண்ணிக்கொள்கிறான். சின்னவயசிலேயே ராதை கிருஷ்ணன் காதல் காவியங்களாக பாடப்பட்டதன் பின்னர் கிருஷ்ணன் காதலனாகவே பெண்களுக்கு அறியப்பட்டான் என்பது மிகச்சிறந்த ஊகம்

ராதையை நீண்டகாலம் கழித்து இப்படிச் சந்திக்கமுடிந்தது அழகாக இருந்தது. ஏனென்றால் அங்கே நகரத்தில் அவனைக்காண முட்டிமோதும் அத்தனை பெண்களுமே ராதைகள்தான்

அவர்களின் காதல்பரவசத்தை சொல்லியிருக்கும் விதமும் கோபியர் கண்ணனைக் கண்டு அடைந்த உணர்ச்சிகளை ஜயதேவர் சொல்லியிருப்பதை அடியொற்றி அமைந்திருக்கிறது.

கிருஷ்ணன் மனிதனாகவும் தெய்வமாகவும் ஒரேசமயம் இருக்கிறான்

ஜெயராமன்