Saturday, March 21, 2015

போர்முனையில்



ஜெ

கர்ணனைப்பற்றிச் சொல்லும்போது கிருஷ்ணன் சொல்லும் வரியை வாசித்தபோது பெரியதாக நினைக்கவில்லை. பிறகு ஞாபகம் வந்தபோது தூக்கிவாரிப்போட்டது. போர்முனையில் சிந்தை மயங்காதவனுக்கு ஞானம் இல்லை. அர்ஜுனன் ஞானம் அடைந்தது அந்த சிறிய தத்தளிப்பினால்தான். அந்த மயக்கம் கர்ணனுக்கு இல்லை. அவனை அழிப்பது அந்த சந்தேகமில்லாத ஆணவம்தான். இதைவிடச் சிறப்பாக அர்ஜுனனையும் கர்ணனையும் விளக்கிவிடமுடியாது

ஜெயராமன்