Friday, April 24, 2015

காந்தாரியின் முகம்



ஜெ

காந்தாரி மணமகள்கள் சூழ்ந்து அமர்ந்திருக்கும்போது எல்லா பகைகலையும் மறந்து அன்னையாக ஆகிவிடுகிறாள். உண்மையில் ஆச்சரியமான ஒரு விஷயம் மகாபாரதத்திலும் காந்தாரியின் கதாபாத்ரம் இப்படித்தான் இருக்கிறது. கிருஷ்ணபக்தை அவள். பெரிய மனமுள்ள அன்னை. கிருஷ்ணனே நீ தர்மிஷ்டை என்று பல இடங்களில் சொல்கிறார்.

இப்படிப்பட்டவள் இவள் என்பது நமக்குத் தெரியாது. ஏனென்றால் நாம் மகாபாரதத்தின் சுருக்கத்தைத்தான் வாசித்திருப்போம். அதுவும் அனைவருமே சின்னவயசிலே வாசித்ததோடு சரி. முதிர்ந்தபிறகு வாசிப்பவர்கள் சொற்பம்.  ஆக்வே எவருக்குமே ஒரு பெரிய பார்வை இல்லை. கௌரவரின் அன்னை ஆகவே கெட்டவள் என்ற மனச்சித்திரம்தான் இருக்கிறது

அதோடு. குந்திக்கு காந்தாரிமேல் உள்ள பொறாமை. அவளுக்கு கணவன் இருக்கிறான். காமம் இருக்கிறது. அதெல்லாம் இவளுக்கு இல்லை. அந்தப்பொறாமையும் மகாபாரதத்திலே ஒரு அம்சம். ஆனால் நாம் குந்தியில் உள்ள இந்த கருமையைப்பர்ப்பதில்லை. காந்தாரியின் வெண்மையையும்பார்ப்பதில்லை. இந்தமாதிரி விரிவான ஒரு எபிக் வரும்போதுதான் அதெல்லாம் நம் மனசுக்கே தெரிகிறது

சிவராம்