Sunday, April 19, 2015

வருபவர்கள்



ஜெ

தொடர்ச்சியாக இளவரசிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். விஜயை, தேவிகை, பலந்தரை, பிந்துமதி, கரேணுமதி, பானுமதி என்று. கௌரவர்கள் பெண்களைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்தப்பெண்களை வரவேற்க ஏற்கனவே அங்கே சிவையும் சம்படையும் இருந்த அந்த சன்னல்மேடை காத்திருக்கிறது என்ற எண்ணம் வருகிறது

அவர்கள் வரும்போது சம்படை செத்துப்போனது ஒன்றும் தற்செயல் இல்லை என நினைக்கிறேன். உண்மையில் ஆரம்பம் முதல் அஸ்தினபுரிக்குள் நுழைந்துகொண்டே இருந்த இளவரசிகளின் பெரிய ஒரு பட்டியலே நினைவுக்கு வருகிறது. அம்பை அம்பிகை அம்பாலிகை காந்தாரி குந்தி என்று. எல்லாருடைய வாழ்க்கையின் நினைவுக்கு வருகிறது

வெண்முரசில் வந்துகொண்டே இருக்கும் இந்த திரும்பும் வரலாறு என்ற அம்சம் முக்கியமானது என்று தோன்றுகிறது

சாரங்கன்