Friday, April 24, 2015

கன்னியர் முகங்கள்



அன்புள்ள ஜெ

குந்தி அந்த இளவரசிகளை நடத்தும் முறை அதிர்ச்சி அடையவைத்தது. பிறகு அவள் சொல்லும்போது அது சரியாகவும் தெரிந்தது. இளவரசிகள் இளவரசிகளாக வளர்ந்தவர்கள். இங்கே திரௌபதியின் glorified servant maids மட்டும்தான் அவர்களெல்லாம். அதை அவர்கள் உணர்ந்துகொள்ள கொஞ்சம் அடிபடவேண்டும். வலிக்கும். ஆனால் அந்த உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள் என்றால் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை. அதை அவள் சொல்லும்போது சரியாகத்தான் இருக்கிறது

ஒருவரி ஒரு பேச்சு என்று வந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியான பேச்சும் அடையாளமும் இருப்பதைக் காணமுடிகிறது. அது ஆச்சரியமாகவே இருக்கிறது. கரேனுமதியின் தங்கை பிந்துமதி புள்ளைப்பூச்சி போல இருக்கிறாள். கரேணுமதி கொஞ்சம் தந்திரமானவள். ஆனால் பீமனின் முதல் மனைவி கறாராக இருக்கிறாள். இந்த வித்தியாசங்களெல்லாம் நினைவில் நிற்காவிட்டாலும் ஒட்டுமொத்தமாக ஒரு வாழ்க்கையைப்பர்த்த உணர்ச்சியை அளிக்கின்றன

சிவம்