Wednesday, April 15, 2015

பானு




ஜெ

எனக்கு ஒரு அக்காள் இருக்கிறாள். பெயரும் பானுமதிதான். அவளுக்குச் சின்னவயதில் செல்வி என்றுதான் பெயர். குண்டாக சிவப்பாக வட்டமுகத்துடன் இருந்ததனால் பானுமதி என்று ஸ்கூலில் பெயர் மாற்றிவிட்டார்கள்.  பானுமதி வந்ததுமே அவளை நான் அக்கால் போலவும் ஒரிஜினல் பானுமதி போலவும் கற்பனைசெய்துகொண்டேன். போகப்போக நீங்களும் அதே கற்பனையிலேயே சென்றுகொண்டிருப்பதைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது. வர்ணனைகள் எல்லாமே அசல் அப்படியேதான்

பானுமதி துணிச்சலும் பெருந்தன்மையும் உடைய பெண் கதாபாத்திரங்களைத்தான் அதிகமும் நடித்திருக்கிறார்கள். அதைத்தான் இங்கேயும் பானுமதி கதாபாத்திரமாக உள்ளது. அதிரதன் பெரிய குதிரை சாஸ்திரம் எழுதுவதாகச் சொல்லும்போது அவளவு பெரிய குதிரைநூலை குதிரை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்ளும் என்று கேட்பதிலே உள்ளது பானுமதியின் தனித்துவம்.. அது பெண்களுக்கே உள்ள தனி நகைச்சுவை. அவர்களுக்கு ஒண்ணுமே தெரியாதது போலவும் இன்னொசெண்டாகக் கேட்பதுபோலவும் ஆப்பு வைப்பார்கள். அதுதான் என் அக்காளின் குணமும்

அந்த இடத்தை வாசித்துர் சிரித்துக்கொண்டே இருந்தேன். மகாபராதத்தில் பானுமதிதான் எனக்கு பிடித்த கதாபாத்திரம் இனிமே. காரணம் இந்த ஒரு வரிதான்

லட்சுமிநாராயணன்