Friday, April 24, 2015

வண்ணங்கள்




அன்பின் ஜெ,

     வெண்முகில் நகரம் வண்ணமயமாய் ஆகிவிட்டது.இளவரசிகள் அதுவும் மணமகள்கள் என்றால் கேட்கவா வேணும்?காந்தாரியின் பெருமிதம் மிக அழகானது.நூறு மகன்களுக்கு மனைவிகள் என்றால் அவள் மனம் பூரிப்பது மிகையில்லை.

     திருமணங்களில் அதிக மகிழ்வுடனிருப்பது மகனைப் பெற்ற அன்னையரே.மருமகள்களுடன் வேறுபாடுகளெல்லாம் பின்னாட்களில் வருவதே.மணநிகழ்வில் எல்லா மாமிகளும் மருமகள்களை சீராட்டுவார்கள்.அது மகன் மீதுள்ள பாசத்தின் வெளிப்பாடே.

          அதே போன்றே காந்தாரியும் மணமகள்களைக் கொஞ்சுகிறாள்.பிறர் கண்படுமோ என்று அஞ்சுகிறாள்.திருமணங்களை நம் மணங்கள் விரும்புவதே அதிலுள்ள சின்னச்சின்ன இணைவுகள்,பேச்சுகள்,கிண்டல்களு
க்குத்தான். இத்தனை பெண்களும் குருஷேத்ரத்தினால் அழுவார்கள் என எண்ணுகையில் மனம் கணக்கிறது.

        எந்தப் பெரிய நிகழ்வுக்கும் பின் வரும் வெறுமை போன்றே இதுவும் ஆகி விடுமோ?       என்னால் வாசிப்பதை அன்றாட நிகழ்வுடன் இணைத்து எண்ணாமல் இருக்கவே முடியாது.கடந்த இரண்டு மாதங்களாக என் பிள்ளைகளின் பள்ளி,என் மற்றும் நண்பர்கள் பள்ளிகள் எனத் தொடர்ந்து ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்.பிராக்டிஸ்,ரிகர்சல்,பாடல்கள்,நடனங்கள்,நாடகங்கள்,டிரஸ்,வளையல்கள்,மாலைகள்,அலங்காரங்கள் ...என்று எங்கு பார்த்தாலும் பிள்ளைகளும்,ஆசிரியர்களும் உற்சாகமாய் திரிந்தார்கள்.

    எல்லாம் முடிந்து பிள்ளைகள் தேர்வுகளுக்குள் புகுந்தனர்.பள்ளிச் சூழலே மாறிவிட்டது.எங்கெங்கும் சீரியசான முகங்கள்.

          அது போன்றதொரு சூழலையே நான் வெண்முரசில் பார்க்கிறேன்.மங்களங்கள் நன்றாக இருக்கின்றன.

எம்