Tuesday, April 21, 2015

துணைவன்

 
 
வெண்முகில்நகரம் பகுதி - 76 

திரௌபதி பீமனை, நகுலனை பற்றி சொல்லி விட்டு, தருமனை பற்றி கேட்டு விட்டு பார்த்தனை கேட்கையில் படபடத்து போனது மனம். "சொல்லவில்லையே" என்று சொல்வதை படிக்கையில் "அனுபவி அம்மையே" என்று தோன்றினாலும் அவளின் தனிமை சூழ் உலகம் என மனம் இரந்து போனது .. அதிலும் "அகம் நெகிழ்ந்து அணைத்துக்கொள்ள விழைபவள் அவள் " என பானுமதி பற்றி சொல்லும் போது எதோ ஒன்று அவளில் உடைந்து போய் இருக்குமோ அல்லது மனம் நிறைந்து வந்த வாழ்த்து அதுவோ ?

எல்லா கோவில்களிலும் சக்தியுடன் இருக்கும் சிவனை நினைத்து கொண்டேன். அல்லது சிவனை விட்டு விலகாத சக்தியின் ஆசிர்வாதத்தை 

மணமான பெண்கள் சிலருக்கு,  மனதை முடிந்த வரை திறந்து பகிர்ந்து கொள்ளும் வகையில் சில ஆண் நண்பர்கள் கிடைப்பார்கள். வெம்மை படர்ந்த மென்மையுடன், தினமும் இரவின் துணையாகி காலையில் உதறி மறக்கும் தலையணை என முழு நம்பிக்கைக்கு  பாத்திரமாகவும், ஒட்டாத படியாகவும், முழுதும் இறக்கி வைத்து சொல்ல பயமில்லாத இடமாக  சில ஆண்கள் கிடைப்பார்கள். அவை சிலருக்கு சில காலம் மட்டும் நீடிக்கும். சிலருக்கு சில கணங்கள் அல்லது நாட்கள். 
அதை போல இன்று பாஞ்சாலிக்கு[ இந்த பெயர் இப்போது தான் முதலில் வருகிறதா? ]  சாத்யகி போல .. 



லிங்கராஜ்