Thursday, April 16, 2015

வளர்தல்




ஜெயமோகன் அவர்களுக்கு

வாசகர் குழுமத்தில் ஒருவர் சல்லியர் தான் கர்னனின் தந்தையா என்பதாக கேள்வி கேட்டு இருந்தார். இன்று (13 Apr 2015) இதை படித்ததும், 

"இவனை நான் வாரம் ஒருமுறை அமைதிப்படுத்தி திரும்ப கூட்டிச்செல்வேன். சினமடங்காத மலைத்தெய்வம் போன்றவன்"

முன்னால் வந்த சிறு குரிப்புகளும் நியாபகம் வருகிறது, இனி வருவதை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகமாகிரது.

வாசகர் தளத்தில் ஒருவர் "இந்த சந்தடி சாக்கில், இந்த தறி ஓட்டத்தில் அவ்வப்போது சமயம் கிடைக்கும் போது ஊடு நூல் போல கிருஷ்ணனை வளர்த்தபடி செல்வதற்கு தனி ஷொட்டு.ஒருவர் கூருகிறார். 

கிருஷ்ணனை மட்டுமா வளர்கிறீர்கள். 

துச்சளை பென் கேட்க சொல்லியும் பூரிஸ்ரவஸ் இன்னும் கேட்க வில்லை.
தவர விட்டு விட்டான். பீமன், துரியன் மனைவியரை வைத்து ஒரு பின்னல்.

ஏதோ சிறு பிள்ளை தனமாக பூதகண்ணாடி வைத்து தவறுகளை சுட்டுகிறோம்.
பூரிஸ்ரவஸை மட்டும் வைத்து எத்தனை ஜாலம்.

கதை தெரிந்தும், ஒவ்ஒரு பென்னும் இப்போது அவனுக்கு கிடைத்து விட மாட்டார்களா என்றும். கிடைக்காமல் போகும் தருனம், போதும், போ அந்த மலை மகளிடம் இதோ வருகிறேன் என்றாயே அவள் அனைப்பில் போய் இரு என்று அவனிடம் சொல்ல வைக்கிறீர்கள்.

நன்றி
வெ. ராகவ்