Monday, April 27, 2015

விளிம்பு



ஜெ

வெண்முரசின் நாவல்களில் பிரயாகை, வெண்முகில்நகரம் இரண்டும் வேறுபட்டிருந்தன. இரண்டுக்கும் ஒரேவகையான நடை.  யதார்த்தமான கதையோட்டம். நிஜமான கதாபாத்திரங்கள். முன்புள்ள நாவல்களிலே வந்த அதே கதாபாத்திரங்கள்தான் .ஆனால் இதிலே அவர்கள் யதார்த்தமாக உள்ளனர்.

ஆச்சரியம் என்னவென்றால் இதிலேதான் கிருஷ்ணன் வருகிறார். கிருஷ்ணனை நீங்கள் உண்மையாக ஆக்கவில்லை. யதார்த்தமாகவே சொல்கிறீர்கள். அவரை ஒரு தெய்வச்சாயல்கொண்டவராகத்தான் காட்டுகிறீர்கள். பொதுவாக demystify செட்கிறதுதான் நவீன இலக்கியங்களின் வேலை. நீங்கள் அதைச்செய்வதில்லை. நீங்கள் செய்வதே வேறு. கிருஷ்ணன் என்ற enigma [நீங்கள் சொன்னது. நான் கடவுள் என்று சொல்வேன்] எப்படி செயல்படுகிறது என்று சொல்கிறீர்கள்

சரியாக கிருஷ்ணன் அறிமுகமாகும் கதை இந்த யதார்த்தக் கதைக்குள் வந்து மாட்டிவிட்டது. அற்புதமாக அதை கடந்துவிட்டீர்க்ள். அங்கேயும் இங்கேயும் போகாமல் நடுவே சூட்சுமமாகப் போகிறது. அவன் உற்சாகமான இளைஞன். பெரிய நிர்வாகி, அரசன், மக்களுக்குப்பிடித்தமானவன் எல்லாம் உள்ளன. இசை சதுரங்கம் வரும்போதுமட்டும் அவன் கடவுள் என்ற சாயலும் வந்து போகிறது. இந்த edge ரொம்ப கவனமாக எழுதப்பட்டிருக்கிறது

சத்யா