Thursday, April 23, 2015

குந்தியீன் கூற்று




இன்றைய பகுதியில் குந்தி -கர்ணன் பற்றி  ஒரு முக்கிய இடம் -சாத்யகி “நீங்கள் அவரை அறிவீர்களா?” என்றான். “இல்லை, ஏன்?” என்று குந்தி கேட்டாள். “நீங்கள் எவரையும் முறைமைமீறி சொல்வதில்லை. அங்கரை மட்டும் அவன் என்றீர்கள்.” குந்தி “அவன் சூதன், அவனுக்கென்ன முறைமை?” என்றபடி எழுந்துகொண்டாள்.
இதை நண்பர்கள் எப்படி வாசித்தீர்கள்  ?  

கிருஷ்ணன்


நான் இப்படி புரிந்து கொண்டேன். அர்ஜுனன் தன்னை பற்றி கொண்டிருக்கும் பிம்பம் , பெண்கள் பித்து கொள்ளும் ஆணழகன் என்பது. திரோபதி தன்னை நினைத்து உருகுவாள் என நினைக்கும் போது, அவளோ இவனை பற்றிய என்னினைவும் இல்லாமல் தன் தமயர்களுடன் இருப்பது, அவன் ஆணவத்தை சீண்டுகிறது . அதனலேய அப்போது கோபத்துடன் விற்பயிர்சியில் ஈடுபடுகிறான் , கோபத்துடநுயே காணப்படுகிரண். இதை அறியும் மாயை , சூதர் பாடலில் தூது சொல்கிறாள், தன் காதலுக்காக. அர்ஜுனன் மாயையை , திரோபதிக்கு முன் வைப்பதால் , திரோபதியின் பிம்பத்தை உடைக்கிறான். 
 
 
ஜோதி ராஜேந்திரன்
 
 
குந்தி முன்பு அர்ஜுனன் விதுரரைப்பற்றி சொல்லும்போது இதேமாதிரி பதட்டமடைவாள்,மதியூகி பேதையாகும் கணம்.ஆனால்,இது பரவலாக எல்லாருக்கும் தெரிந்ததுதான்.ஆனால் நீங்கள் முக்கியமான விஷயம் என்று சொன்னது வேறு எதையோ சுட்டுவதற்காக?நான் சத்தியமாக கவனிக்கவில்லை.உங்கள் இடுகையைப் பார்த்தபிறகே யோசிக்கிறேன்.இப்போது அந்த ஒவ்வொரு வரியும் கேள்விகளாகி விட்டிருக்கின்றன.

கிருஷ்ணன் சார்,நீங்கள் கவனித்த முக்கியமான விஷயத்தைச் சொல்லிவிடுங்கள்,இல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும்?
 
மணவாளன்
 
 
 கர்ணணின் பிறப்பு அரச ரகசியம். ஆகவே எல்லோருக்கும் "தெரிந்தே" இருக்கிறது. 
 
 
ஆனாலும் ரகசியம். வாய்ப்பிருப்பவர்கள் அதைப்பற்றிப் பேசி உறுதிப்படுத்த விழைகிறார்கள். அல்லது மிகப்பெரிய 
ஆளுமையை ஒருகணமேனும் தடுமாற வைத்துப் பார்க்கிறார்கள். தாய்க்கு மூத்த மகன் என்ற உறவு வேறந்த உறவையும்
விடப் பெரிதானது. ஆகவேதான் "தந்தை" வெகுவிரைவில் மீண்டாலும் தாய் 
தன் உறவென எண்ணுபவர்களிடமாவது புலம்பி தற்துயராற்றுகிறார். 

சித்தநாதபூபதி

//நான் இப்படி புரிந்து கொண்டேன். அர்ஜுனன் தன்னை பற்றி கொண்டிருக்கும் பிம்பம் , பெண்கள் பித்து கொள்ளும் ஆணழகன் என்பது. திரோபதி தன்னை நினைத்து உருகுவாள் என நினைக்கும் போது, அவளோ இவனை பற்றிய என்னினைவும் இல்லாமல் தன் தமயர்களுடன் இருப்பது, அவன் ஆணவத்தை சீண்டுகிறது . அதனலேய அப்போது கோபத்துடன் விற்பயிர்சியில் ஈடுபடுகிறான் , கோபத்துடநுயே காணப்படுகிரண். இதை அறியும் மாயை , சூதர் பாடலில் தூது சொல்கிறாள், தன் காதலுக்காக. அர்ஜுனன் மாயையை , திரோபதிக்கு முன் வைப்பதால் , திரோபதியின் பிம்பத்தை உடைக்கிறான்//

    இதனுடன் கூடவே மாயை க்கும் திரௌபதிக்கும் உள்ள உறவும் கணக்கில் கொள்ளவேண்டிய ஒன்று .   நுனுக்கமாக மாயை தன் கையில் தான் மல்லிகை சரத்தை பிடித்டிருக்கும் விதத்தில் திரௌபதியை வீழ்த்திச்செல்கிறாள். அர்ஜுனனுக்கும் திரௌபதிக்கும் அப்போதுநடக்கும் உறவு இரு கூர்வாள்கள் ஒன்றை ஒன்றௌ தன் கூர்முனையுடன் சந்த்தித்துக்கொள்ளும் புள்ளி. அது அவ்வாறு மட்டுமே நிகழ முடியும் என நிணைக்கிறேன். 
 
 

கிருஷ்ணன் இன்றைய வென்முகிழ் நகரத்தில் குந்தி கர்ணனுக்காக மடை மீரி பேசும் போது நேற்றூ சாத்யகியிடம் அவள் சொன்னது ஒரு வகையான சமாலிப்பாகவே தெரிகிறது. நீங்கள் எப்படியும் வேறு பார்வை அதை பற்றி வைத்திருப்பீர்கள் .
சதீஷ்



குழும விவாதம்