Monday, April 20, 2015

பெண்களின் பெருக்கு



ஜெ

திடீரென்று பாரதவர்ஷமே கல்யாணக்கோலம் கொண்டதுபோலத் தோன்றுகிறது. விதவிதமான திருமண வியூகங்களை சாத்யகி கேள்விப்படும்போது இந்த கல்யாணங்களெல்லாமே போருக்காகத்தான் செய்யப்படுகின்றன என்பதிலுள்ள பெரிய முரண்பாடும் மனதில் உறுத்தியது

கல்யாணங்களை ஒரு பெரிய சதுரங்கம் போலத்தான் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவரை நோக்கித்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். வெண்முரசு தொடங்கி ஒருவருடம் ஆகிறது. அப்போதே போருக்கான முஸ்தீபுகள் ஆரம்பித்துவிட்டன

ஆனால் பீஷ்மரும் விதுரரும் எல்லாம் சேர்ந்து போரை ஒரு தலைமுறைக்காலம் ஒத்திப்போட்டிருக்கிறார்கள். ஆனால் இனிமே முடியாது. அந்த கட்டம் வந்துவிட்டதைத்தான் இந்த கல்யாணங்கள் காட்டுகின்றன

திடீரென்று பெண்களாக வந்து நிறைய ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாரும் விதவைகள் ஆவார்கள் என்ற செய்தி மனதிலே இருக்கிறது. ஒருவேளை அதற்காகத்தான் நீங்களும் இத்தனை விஸ்தாரமாக எழுதுகிறீர்களோ?

சிவம்