Saturday, April 18, 2015

படுத்திருப்பவன்



ஜெ,

நோயில் கிடக்கும்போது துரியோதனனின் மனநிலை மாறுவதும் நோயிலிருந்து எழுந்ததுமே அது திரும்பி மாறிவிடுவதும் நுட்பமான இடங்கள். இதை என் அப்பாவிடமே நான் கண்டிருக்கிறேன். படுத்திருக்கும்போது அவர் குழந்தை போன்ற மனிதராக இருந்தார். ஆனால் எல்லாம் சரியாகி எழுந்து அமர்ந்ததும் ஆளே மாறி மீண்டும் பழைய திமிரும் தெனாவெட்டும் கொண்டவராக ஆகிவிட்டார்

இதுபோன்ற நுட்பமான விஷயங்கள்தான் வெண்முரசு உருவாக்கும் பெரிய கதையோட்டத்துக்கு சிறிய நுணுக்கத்தை அளிக்கின்றன. மதுரை போன்ற பெரிய கோயில்களில் பெரிய பெரிய சிலைகளைப்பார்ப்போம். கூடவே தூண்களில் உள்ள குட்டிக்குட்டிச் சிலைகளையும் பார்ப்போம். குட்டிச்சிலைகள் நமது மனசுக்குள் நின்றுகொண்டே இருக்கும். அதைப்போல

உலகம் நின்றுகொண்டிருக்கிறது, நான் படுத்திருக்கிறேன் என்று துரியோதனன் உணர்வது நுட்பமானது. ஏனென்றால் நின்றுகொண்டிருப்பதுதான் உயிருள்ளது. படுத்திருப்பது விழுந்துவிட்டது. அப்போது அவன் பானுமதியின் கையிலே குழந்தைபோல இருக்கிறான்

இதனால்தான் நோயிலே கிடக்கும் ஆண்களைப் பெண்கள் மிகவும் விரும்புவார்கள். மிகவும் அருமையாகப் பணிவிடைகள் செய்வார்கள் என்று தோன்றுகிறது


எஸ்