Friday, May 15, 2015

சிற்பகோபுரம்



ஜெ

இதுவரை வாசித்த வெண்முரசை ஒட்டுமொத்தமாக நினைத்துக்கொண்டபோது ஒரு கோபுரம் போல இருப்பதாகத் தோன்றியது. கோபுரம் நிறைய ஆயிரக்கணக்கான சிற்பங்கள் இருக்கும். ஒவ்வொன்றும் கச்சிதமாக ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். நாம் மணிக்கணக்காகப் பார்க்கலாம். ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்திக்கொள்ளலாம்.

 ஆனால் நாம் நினைத்துப்பார்த்தால் தனித்தியாக நினைத்துப்பார்க்கவே முடியாது. ஒரு ஒட்டுமொத்தமாக தான் ஞாபகம் வரும். சிற்பங்களை அள்ளிக்கூட்டி வைத்ததுமாதிரியும் இருக்கும். கச்சிதமான ஒழுங்கும் இருக்கும். பார்த்துப்பார்த்து முடியாது. ஒன்றை நினைத்தால் ஆயிரம் ஞாபகத்துக்கு வரும்

இதுதான் கிளாஸிசம் என்று நீங்கள் சொல்லக்கூடியது என்று நினைக்கிறேன்

ராஜ்