Thursday, May 7, 2015

நச்சுநதி




“நீர் மிகக் குளிர்ந்தது. மேலே ஆலகாலமுண்ட அண்ணலின் காலடியில் இருந்து வருகிறது. அது உயிர்களுக்கு நஞ்சு… அதன் கரிய நிறத்தை பார்த்தீர்களல்லவா?” என்றான் குகன். பூரிசிரவஸ் திரும்பி நோக்கினான். “அதோ, அந்த வயலில் தேங்கியிருக்கும் நீரை குதிரைக்கு அளியுங்கள். அது இளவெம்மையுடன் இருக்கும்” என்றான். அவன் குதிரையை இழுத்துக்கொண்டுசென்று வயலில் நிறுத்த அது ஆவலுடன் குனிந்து நீரை உறிஞ்சியது. “அதுவும் இந்நதிதான். ஆனால் அவள் அகம் கனிந்து முலைசுரந்தது அது.”

போகிற போக்கிலே சொன்னதுபோல இருந்தாலும் இரண்டாவது முறை வாசித்தபோது இந்த வரி என்னை அசரடித்தது. அது திரௌபதியைப்பற்றிய அற்புதமான உவமை. அமுதம்தான். ஆனால் அது நஞ்சு. அதுவே கனிந்து முலையூறினால் அமுதம்.

கரியநிறம் என்ற வார்த்தைதான் அந்த அர்த்தத்தை எனக்குக்கொடுத்தது. ஜெ , வெண்முரசை எப்படிப்படித்து முடிக்கப்போகிறோம். எவ்வளவு புதைந்துகிடக்கிறது

சாரங்கன்