Tuesday, July 14, 2015

கிருஷ்ணனின் கண்கள்

ஆசிரியருக்கு ,

சததன்வாவைத் தலை கொய்யும் காட்சி ஒரு குரூர அழகியல். வெட்டப்பட்ட தலை மண்ணில் வீழும்போது ரத்தினத்தை நோக்கிய ஒரு அடங்கா விழைவும் அதன் விளைவும் பரிதாபம் கொள்ள வைக்கிறது.

அதே நேரம் நம்மை எந்த உணர்வுமற்று ஒரு சாதாரண நிகழ்வை காணும் ஒரு வெற்றுப் பார்வையாளனாகவும் ஆக்குகிறது. கிருஷ்ணனின் பார்வையை நாம் அடைகிறோம்.

இந்நாவலின் துடிப்புமிக்க பகுதிகளின் வெற்றி என்ன என்றால் அது ஒரேசமயம் ஒருகணம் உணர்வுச்சத்திலும் மறுகணம் உணர்வு வடிந்த வெற்று மனதுடனும் இதைப் படிக்கிறோம் என்பதே. 

கிருஷ்ணன்.