Sunday, August 16, 2015

சிலிர்ப்பு

மழையில் நனைந்து  சிலிர்க்க வைத்தது இன்றைய அத்தியாயம்.
தெய்வச் சிலை முன் நின்று கண்ணீர் விட்டு அழைத்துக் துடிக்கும் நிலை மெய்சிலிர்ப்பு.

/அவர்களை அறைந்து தழுவி உடைகளை கொப்புளங்களுடன் ஒட்டவைத்து, முகம் கரைந்து வழிய, மூக்கு நுனிகளிலும் செவி மடல்களிலும் சொட்டி மழை கவிந்தது. நடுவே அவள் கருவறை நின்று நீராட்டு ஏற்கும் அன்னையின் சிறு சிலை போல் அமர்ந்திருந்தாள்./

அவளை அறியாத பாவத்திற்கு கிடைக்கும் சவுக்கடிக்கு  உள்ளம் வலித்தது.
/மரங்கள் நீர் சவுக்குகளால் வீசப்பட்டு துடிதுடிக்கத் தொடங்கின. விண்ணின் சடைச்சரங்கள் மண்ணை அறைந்து அறைந்து சுழன்றன. /

மழையில் கரைந்து பெருகி யமுனையை அடைக்கலம் தேடியது அங்கு கூடிய அத்தனை பேரின் அறியாமையும்!!!

கணங்கள் யுகங்களாவதை ஆயர் அன்றுதான் அறிந்திருப்பர். இரவின் நீளத்தையும் ஆழ்ந்த தனிமையையும் அறிந்ததைப்போல..!

/ஒருநாளும் இரவை அதுபோல் உணர்ந்ததில்லை ஆய்ச்சியர். அத்தனை நீளமானதா அது? அத்தனை எடை மிக்கதா? அத்தனை தனிமை நிறைந்ததா? இரவெனப்படுவது அத்தனை எண்ணங்களால் ஆனதா? இப்பெரும் ஆழத்தின் விளிம்பில் நின்றா இதுநாள் வரை களித்தோம்? இனி இரவு என்ற சொல்லை அத்தனை எளிதாக கடந்து விட முடியாது என்பதை அவர்கள் அறிந்தனர். அருகே நின்றிருக்கும் கொலைமதவேழம். /

திகழ்க இறையருள்!
  தினேஷ்குமார்.

குழுமவிவாதம்