Friday, August 7, 2015

உரைகல்

அன்புள்ள ஜெயமோகன்,


அக்ரூரரையும் கிருதவர்மனையும் சியமந்தக மணியை மீட்டு வர கிருஷ்ணன் அனுப்பவது அவர்களை பரிசோதிப்பது போல இருக்கிறது. அவர்கள் இருவரும் துவாரகையின் தூண்களாக இருக்கிறார்கள். மணி அவர்களை திசைதிருப்பும் சாத்தியக்கூறு இருக்கிறது என்பதை கிருஷ்ணன் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. எதற்காக கிருஷ்ணன் இந்த பரீட்சையை நடத்த வேண்டும்?

நீங்கள் இங்கே வந்திருந்தபோது கேட்டதுதான். சியமந்தகம் விழைவின் உருவகம் என்று சொன்னீர்கள். நான் கேட்டது அதல்ல, அவர்களை தடுமாற வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறேன். நான் இதைத் தொடர்வதற்குள் பேச்சு திசைதிரும்பிவிட்டது. அதனால் இப்போது ஈமெயிலில் கேட்கிறேன். பின்னால் ஏதாவது வருமா?

அன்புடன்
ஆர்வி
 
 
அன்புள்ள ஆர்வி
 
பொதுவாக ஒருவரின் உண்மைத்தன்மையை அல்லவா சோதித்துப்பார்க்க ஆட்சியாளன் விரும்புவான்? சியமந்தகம் ஓர் உரைகல்

ஜெ