Tuesday, November 10, 2015

ரத்தம்

ஜெ

காண்டீபத்தின் இந்தப்பகுதிகளில் நுட்பமாக வன்முறைக்கும் அகிம்சைக்குமான உறவு சொல்லப்படுகிறது. ஒரு மாவீரனை இன்னொரு அகிம்சைமாவீரனுக்குச் சமானமாக நிற்கவைக்கிறீர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன உணர்கிறார்கள் என்பது பெரும்பாலும் பூடகமாகவே சென்றுகொண்டிருக்கிறது

யாதவர்கள் அந்த சோலைக்குள் நீருக்கு\ச் செய்யும் போர்தான் உண்மையில் வன்முறை எப்படி உருவாகி நிலைநிற்கிறது என்பதற்கான ஆதாரம். அதாவது பங்கிட மனமில்லாதவர்களின் சமூக வன்முறை. அதற்கு எதிரான அரசு வன்முறை

அந்த ரத்தத்தைக் குடிப்பது ஒரு சமூகத்தில் வாழ்வதற்கு இன்றியமையாததுதான்

சாரங்கன்