Thursday, January 28, 2016

தந்தை





அன்புள்ள ஜெ

திருதராஷ்டிரரை ஜெயத்ரதன் தந்தையே என்று அழைக்கும் இடம் சிறப்பு. அந்த மனமாற்றம் நிகழ்வது வரைக்குமான அந்த சூட்சுமமான பயணம் சொல்லப்படாமலேயே இருக்கிறது. எந்த சம்பிரதாயமும் இல்லாமல் கௌரவர் தந்தையைச் சந்திப்பது, அவர் அவர்களைக் கண்டிப்பது, அவர்களுக்குமேலாக அவர் கர்ணனை நிறுத்துவது, அவர் பிள்ளையைக்கொஞ்சுவது, துச்சளையை தடவிப்பார்த்து மகிழ்வது, தாயும் மகனும்போல மகளும் தந்தையும் இருப்பது

அவன் வரும்போது கெத்தாக நான் இன்னார் என்று பட்டமும் கிரீடமுமாக சொல்கிறான். ஆனால் மனம் உருகி தந்தையே என அழைக்கிறான். அந்த ஒரு சொல் அவரது மனதைத்திறந்துவிடுகிறது. ஏனென்றால் அவர் ஒரு மகத்தான தந்தை. ஒரு பிரஜாபதி

பார்த்தசாரதி