Sunday, March 13, 2016

கிரகணம்



அன்புள்ள ஜெயமோகன்,’

                  வெய்யோன் முடிவில் கிரகணம் ஏற்படும் போது ராகு கதிரவனை விழுங்குகிறான். அப்பொழுது கர்ணன் நாகபாசனாக மாறிவிட்டிருக்கிறான். பின் மாளிகைக்கு திரும்பியவனிடம் துச்சாதனன் இப்பொழுதுதான் பழைய பொழிவு துரியனின் முகத்தில் தெரிகிறதென்று. ஆக துரியனின் வலத்தோளில் ராகு மீண்டும் வந்த மர்ந்துவிட்டான். கர்ணன் நாகபாசனாய் ராகுவின் வடிவில் வலத்தோளில் அமர்ந்துவிட்டான். அவன் இனி அவன் இடத்தோளில் கேது வந்தமர்ந்தால் போதும் அவன் வஞ்சம் முழுமையடைந்துவிடும். அதை சகுனியும் கணிகரும் செய்துவிடுவார்கள்.
வெண்முரசின் பத்தாம் நூலுக்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்,
லோ. கவின் ராஜ்குமார்,
கோவை.