Thursday, April 21, 2016

யாருடைய வஞ்சம்?



ஜெ

ராஜசூயம் பற்றிய அவைவிவாதத்தில் மூர்க்கமாகப் பேசும் பீமனை நுணுக்கமாக குந்தி தூண்டிவிடும் காட்சி என்னை உறையச்செய்தது. குந்தியில்தான் கடைசியில் பீமன் செய்த நூறு சகோதரக்கொலைகளின் வித்து இருக்கிறது. அது மூலமகாபாரதத்திலேயே பல இடங்களில் நுட்பமாக வரும். கடைசியில் காந்தாரி ஸ்த்ரீபர்வத்தில் சொல்லியும் காட்டுவாள்

குந்தியின் இந்தக்குணாதிசயம் அற்புதமாக ஆரம்பம் முதலே வந்துகொண்டிருக்கிறது. அவளுடைய பேராசையும் வன்மமும்தான் மொத்த மகாபாரதத்தையே முன்னால்செலுத்தும் விசைகள். அதை மகாபாரதம் தொட்டுக்காட்டிச் செல்கிறது. வெண்முரசு அவ்வப்போது ஆழமாகச்சொல்லிச்செல்கிறது

எஸ்.அரவிந்தன்