Sunday, April 17, 2016

தியான நிலை



ரக்த பீஜன் சம்ஹாரம் வரையிலான அத்தியாயங்களை தொடர்ச்சியாக படித்தேன். தேவியின் வருணனைகள் எல்லாம் மிக ஆழத்தில் பெரும் பரவசத்தில் ஆழ்த்துவதை உணர்ந்து கொண்டிருந்தேன். எருமை தலைகளின் மேல் அமர்ந்திருப்பவள், சிம்மம் மேல் அமர்ந்து வருபவள்..பல இடங்கள் வாய் விட்டு சத்தமாக படிக்க தூண்டும் அளவிற்கு மொழியின் பாய்ச்சல்..குறிப்பாக முதல் அத்தியாயம்.

மகிஷ வதம் ஒரு தியான நிலையாக விரித்து ஜெ எங்கோ எழுதியிருந்தது நினைவு வருகிறது. அதன் சாரம்சம் இது தான் என்று நினைக்கிறேன்..(சரியாக நினைவில் இல்லை).. எண்ணங்கள் கட்டுபடுத்தும் தோறும் பெருகி கொண்டே போவது..ரக்த பீஜன் போல்..அதை வெல்ல மனதை இரண்டாக பகுத்து, ஒன்று சாட்சியாக நின்று கவனிக்கும் தோறும் மனம் மெல்ல அடங்குகிறது..தேவி தன்னை இரண்டாக பகுத்து ரத்த துளிகளைஉண்பது போல.. அது எந்த கட்டுரை என்று யாருக்காவது நினைவிருந்தால் பகிரவும்..
 
ஆர் பிரபு