Sunday, August 21, 2016

பிறப்பு





ஜெ

மூன்றுமுறை பிறக்காதவன் முறையாக இறப்பதில்லைஎன்றவரியை ஒரு சின்ன அதிர்ச்சியுடன் வாசித்தேன். ஏற்கனவே வெவ்வேறு வார்த்தைகளில் உங்கள் சொற்களில் இதைக்கேட்டிருக்கிறேன். முதல்பிறப்பு அம்மாவின் கருப்பையில் இருந்து. இரண்டாம் பிறப்பு ஓர் அடையாளம் அடைதல். நான் என்னை ஒரு பொறியியலாளன் என்று சொல்வேன். நான் பொறியியலாளனாகப் பிறந்தது உண்மையில் அமெரிக்கா வந்தபின்னாடிதான். ஆனால் இன்னொரு பிறப்பு இருக்கிறது. அதை வனப்பிரஸ்தம் என்று சொல்லலாம். ஆனால் நான் நினைப்பது அது அல்ல. அது ஞானத்தின் பாதையைக் கண்டுபிடிப்பது என்று நினைக்கிறேன். நான் வெறும் ஒரு பொறியியலாளன் கிடையாது. அதுக்கும் மேலே எனக்கு ஒரு அடையாளம் உருவாகவேணும். அந்த இடம். அதைநோக்கிப்போகவேண்டும். அதுதான் என் அடையாளம். அதைநோக்கிப் பிறக்கவேண்டும் . அதுதான் அந்த மூன்றாம்பிறப்பு. ஒரு உலுக்கு உலுக்கியவரி

மணவாளன்