Thursday, August 18, 2016

அமைச்சனும் நிமித்திகனும்



ஜெ

சகதேவனின் நிலை பற்றி விதுரர் கேட்ட கேள்விக்கு அவன் இப்படிப் பதில் சொல்கிறான்

நிமித்திகன் வெறும் சான்றுமட்டுமே. ஊழ் வடிவில் அவனுக்கு பிரம்மம் காட்சியாகிறது. தன்னிலை கரைந்து வழிபட்டு நிற்பதன்றி அவன் செய்யக்கூடுவது பிறிதொன்றுமில்லை

இரு சாராரிடம் அரசன் அபிப்பிராயம் கேட்கவேண்டும் என்று நூல்களில் உள்ளது. அமைச்சன், நிமித்திகன் இரண்டுபேரும் தேவை. அமைச்சன் எல்லாவற்றிலும் உள்ளே புகுந்து ஊடாடிக்கிடப்பவன். நிமித்திகன் எதிலும் கலந்துகொள்ளாமல் விலகி நிற்பவன்

இந்த முரண்பாடே சுவாரசியமானதுதான். பற்றைப்பற்றி அவ்வளவு  சிலாகித்துப் பேசி முடிக்கிறார் விதுரர் கேட்டு நின்ற சகதேவன் கொஞ்சம் கூட பற்றில்லாமல் அப்பேச்சை முடித்துவைக்கிறான்

சுவாமி