Wednesday, August 24, 2016

தருமனும் பாஞ்சாலியும்


இன்றைய பதிவில் இருளில் நிற்கும் தருமர் பாஞ்சாலியை நினத்து ஏங்குவதும் அந்த உளனாடகமும் நம் எல்லாராலேயும் மிக அனுக்கமான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். இத பல்லாயிரம் முறை பல்வேறு சூழல்களில் செய்கிறோம் நாமனைவருமே
அவளின் இந்த விலக்கம் நிரந்தரமானதல்ல அப்படி இருக்கவே முடியாது என்ற அவரின் விழைவு ஏக்கம் எல்லாம் நமக்கே ஏற்பட்டது போல உணரவைக்கும் வரிகள்.

இருண்ட காட்டுக்குள் நெடுந்தூரம் சென்ற தருமர் திரும்ப வருவது குறித்தான கவலையில் ஒரு அடி தவறானாலும் அது பிழையான எல்லைக்கு கொண்டு போய் விடுமென நினைக்கிறார்.
தவறான அடிகளை எடுத்து அவர் இழந்தவைகள்  அவருக்கு கற்றுக்கொடுத்த கடினப் பாடங்கள் அப்படி அவரை செம்மையாக்கி விட்டது போல.

தொடக்கூடாத சுவடிகளை தொட்டு பின் அதன் விளைவை அறிந்து  கவனமாக இருக்கும் குரங்கும் இப்படித்தான் மீண்டும் சுவடிகளின் பக்கம் போக அஞ்சுகிறதில்லையா?
விம்மியும் தேம்பியும் நெஞ்சுடைந்து அவர் அழுவது அந்த குரங்கை இழந்த்தற்கு மட்டுமல்ல அவர் இழந்த எல்லாவற்றிற்கும் சேர்த்துத்தான்

லோகமாதேவி