Friday, August 26, 2016

சாமானியர்




ஜெ,


வெண்முரசில் மையத்துடன் இணையாமல் அவ்வப்போது வரும் வாழ்க்கை பற்றிய சில கூர்மையான அப்செர்வேஷன்ஸ் எனக்கு மிகமுக்கியமாக தோன்றுவதுண்டு

இன்றைக்கு சாமானிய மக்களைப்பற்றி சாந்தீபனி முனிவரும் தர்மரும் பேசிக்கொள்ளும் இடம் அதைப்போல ஒன்று.சாதாரண மக்கள், கிராம மக்கள் இனிமையானவர்கள் எளிமையானவர்கள் என்பதெல்லாம் நம் ஊகங்கள்தான். நம் சொந்தக்காரர்களைவைத்தே இதை உணரலாம். அவர்களை நம்மால் முழுமையாகப்புரிந்துகொள்ளவே முடியாது. அவர்கள் கண்டிப்பாக நல்லவர்கள் ஒன்றும் அல்ல. நம்மைப்போலத்தான். அல்லது நம்மைவிட கொஞ்சம் கீழானவர்கள்

எனென்றால் வருசக்கணக்கில் நீளும் கோபமும் வன்மமும் எல்லாம் அவர்களிடம்தான் இருக்கும். அவர்களிடமிருக்கும் வெறுப்பும் வன்முறையும் மிகமிக கடுமையானவை



சாரதா