Friday, September 9, 2016

குழந்தையின் இருப்பு





ஜெ 

யுவனாஸ்வன் தன்னருகே குழந்தை இருப்பதை உணர்ந்து பரவசம் அடைவதும் குழந்தை இல்லை என்று உள்மனசுக்குத்தெரிந்தும் கண்ணைத்திறக்காமலிருப்பதும் நுட்பமானவை. பெண்களுக்குத்தெரியும் அது. என் குழந்தையை அம்மா வீட்டில் விட்டிருந்தபோது குழந்தையைப்பிரிந்திருக்கும் மனத்துன்பத்தில் உச்சியில் அப்படியே குழந்தை இங்கே இருப்பதாகவே நினைப்பேன். பரவசம் அடைந்து அதன்பின்னர் அதிலெயே திளைத்துக்கொண்டிருப்பேன்.

அதை வெண்முரசில் வாசித்தபோது எதையெல்லாமெழுதியிருக்கிறார் என்ற வியப்பு வந்தது. அந்த வரியும் மிகக்கச்சிதமாகச் சொல்லப்பட்டிருந்தது .
அக்குழவியின் ஆடைகளை எடுத்து நெஞ்சோடணைத்துக்கொண்டான். அது படுத்திருந்த மெத்தையின் மெல்லிய குழியை வருடி வருடி கண்ணீர்விட்டான். நாளும் அவன் துயர் ஏறிஏறிச் சென்றது. அதன் உச்சியில் அத்துயர் மறுபுரிச்சுழற்சி கொண்டது. ஏழாம்நாள் அவன் அரைத்துயிலில் இருந்தபோது தன்னருகே குழவி இருப்பதை உடலால் உணர்ந்தான்.

அவ்வளவு சுருக்கமாக அந்த மனமாற்றத்தைச் சொல்லியிருந்தது பெரிய ஆச்சரியமாக இருந்தது

ஆர். சுகந்தி