Friday, October 28, 2016

யோகமெய்மை




ஜெ

அத்ரி முனிவர் எதைக்கண்டடைந்தார் என்பது முக்கியமான கேள்விதான். அதை உருவகமாக இல்லாமல் யோகமார்க்கமாக கற்றுக்கொண்டு சொல்கிறேன். சொல்லிப்பார்ப்பதுஇதான் . அத்ரியின் ஞானம் கட்டுப்படுத்தபப்ட்டது. அதை எப்படிக் கட்டுப்படுத்துகிறார்? முன்று ஞானங்களால். பிரத்யக்‌ஷம் அனுமானம் சுருதி. கண்ணுக்குத்தெரியும் நடைமுறை அறிவைக்கொண்டு அதைக் கட்டுப்படுத்தலாம். 

அத்துசன் அனுமானம் என்னும் சொந்த அறிவைக்கொண்டும் கட்டுபப்டுத்தலாம். அனுமான்ம் என்பது அகவய உண்மை. அதில் பெரும்பகுதி ஈகோ. பிரத்யட்சம் என்பது வெளியே உள்லவற்றால் ஞானம் கட்டுப்படுத்தப்படுவது. மிச்சமிருப்பது  சுருதி. அது முன்னோர் ஞானம். முன்னோர் எண்ணியதற்கு மேலே செல்லவே முடியாது. 

இந்த அம்சம்தான் யோகத்தில் பெரிய தடை. யோகத்தில் ஒரு அம்சம் என்பது மடைதிறந்து வெளிப்படும் உண்மையான ஞானம். தேன்கூடு கலைவதுபோல கொட்டிக்கொன்றலும் கொல்லும். பலபேர் சித்தப்பிரமை பிடித்து அழிந்ததை நானே கண்டிருக்கிறேன். ஆனால் அதில் தான் புதியது திறக்கும். வன்யமான அந்த மெய்ஞானம் திறக்கும் தருணத்தையே பைரவன் வந்துசெல்லும் காட்சி காட்டுகிறதென நினைக்கிறேன்

எஸ்.குமாரசாமி