Tuesday, December 6, 2016

சித்ரகேதுவின் மறுபிறப்பு





ஜெ

பலபடிகளாகக் கதை சுழன்று சுழன்று சொல்லப்படுவதனால் பல இணைப்புக்களை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. நாவல் முடிந்தபிற்பாடுதான் மொத்தமாகப்பார்க்கவேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் இந்த விருத்திரன் கதையை மட்டும் மொத்தமாக ஒருமுறை வாசிக்கவேண்டும். ஏனென்றால் ஒருகதையைச் சொன்னதுமே அதை மறுத்து அடுத்தகதை அதே விஷயத்தைச் சொல்வதுபோல இது அமைந்திருக்கிறது

உதாரணமகா விருத்திராசுரன் சித்ரகேதுவின் மறுபிறப்பு. ஆனால் சித்ரகேது நான் என்னுடையது என்னும் அடையாளத்தைத் துறக்கமுடியாமல் சாபம் பெற்றவர். அவர் மறுபிறப்பில் விருத்திரனாகி நகரே அழியும்போதும் குடிமிகுந்து மயங்கி சும்மா அமர்ந்திருக்கிறார். இந்த முரண்பாட்டை இப்போதுதான் கவனித்தேன்

கருணாகரன்