Wednesday, January 11, 2017

நிறைவு



ஜெ,

வெண்முரசின் கடைசி அத்தியயாம் மிக எளிமையானதாகவும் அதேசமயம் எல்லா முடிச்சுக்களையும் கச்சிதமாகப்போடுவதாகவும் இருந்தது.  சண்டன் சென்றுகொண்டிருப்பது காளகஸ்திக்கு என்றதுமே வண்ணக்கடலில் வரும் அத்தியாயம் நினைவுக்கு வந்தது. http://www.jeyamohan.in/56448#.WHQ5V3pppdg. அந்த அத்தியாயத்தில் சூலத்தில் பாய்ந்து உயிர்விடுகிரார்கள். சண்டனும் அங்கேதான் செல்கிறான். அந்தப்பிச்சாண்டவரும் வந்துவிடுகிறார், வேறொரு வடிவத்திலே. அந்த அத்தியாயத்தில் ஒலித்த பாடலும் கேட்கிறது

மறுபக்கம் மகேந்திரமலையில் இருந்து மகாபாரதம் என்னும் நாராயணவேதத்தை எழுதிக்கொண்டிருக்கும் வியாசரை ஒரு சாதாரண அன்னை தன் தாலாட்டுப்பாட்டிலே நினைவுகூர்ந்து சொல்கிறாள். இவர்களுக்கு அவள் பாட்டே வழிகாட்டியாகிறது. எங்கே செல்வது எப்படிச்செல்வது எல்லாமே சொல்லப்பட்டுவிட்டது. இனிமையான அழகான முடிவு

அர்ஜுனனின் நிறைவு நிகழும் நாவல் அர்ஜுனனின் பிறப்பைப்பற்றிச் சொல்லி முடியும் இடம் மன எழுச்சியை அளித்தது

சாரங்கன்