Saturday, January 14, 2017

திரிமூர்த்தி






ஜெ,

முதலில் சிவனும் பார்வதியும் காளனும் காளியுமாக வந்தபோது அப்படியே கிராதார்ஜூனியத்தை ஒட்டி எழுதியிருப்பதாக நினைத்தேன். ஆனால் அவர்கள் சென்றுசேரும் அந்தக்கிராமத்திலே அத்தனைபேருமே சிவன்கள் தான் என்பதும் சிவம் என அவர்கள் சொல்வது காலத்தில் எங்கோ வாழ்ந்த ஒரு மூதாதைதான் என்பதும் மேலும் கவித்துவமாக இருந்தது

ஆனால் அதில் உச்சிகட்டம் என்று தோன்றியது சடையன், எரியன், பேயன் என்னும் மூன்று மூதாதையர். அவர்கள் மூன்று திசைநோக்கி அமர்ந்திருக்கிறார்கள். அவர்களும் சிவ வடிவம்தான். அவர்களை திரிமூர்த்திசிவன் என்று சொல்லலாம் என்று தோன்றியது

ஒருமுகம் தீ [எரியன்] ஒருமுகம் பேய். ஸ்மஸான ருத்ரன். . இன்னொரு முகம் சடைகொண்ட தவசி. விரிவாகவே யோசிக்கமுடிந்தது 
மகேஷ்