Wednesday, January 18, 2017

பாசுபதபூசைகள்



ஜெ

இணையத்திலே பாசுபதம் என்று அடித்துத்தேடிப்பார்த்தால் ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. பாசுபதயாகம் பாசுபத பூசை எல்லாம் பிரபலமக உள்ளன. ஆனால் பூசிக்கப்படுபவை அதர்வண வேத மந்திரங்கள்தான் என தெரிகிறது. இது ஏன் என்று கேட்டேன். அதர்வணத்திலேதான் பாசுபதம் உள்ளடங்கியிருக்கிறது என்று சொன்னார்கள். அதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதர்வணத்தில் பாசுபதம் அடகியுள்ளது என்றால் அது ஏன் அததனை காலம் தனி ஒரு மதமாக நீடித்தது? அதை இவர்கள் பூசைக்குள் உள்ளிழுத்துக்கொண்டார்களா? அதர்வணவேதத்தில் கன்றுகுட்டியை பலிகொடுப்பதுண்டு என்று என்னிடம் ஒருவர் சொன்னார். அதெல்லாம் இப்போது நடக்கிறதா என்று கேட்க ஆசை

நரசிம்மன்

அன்புள்ள நரசிம்மன்

சுட்டிகளைப் பார்த்தேன். பாசுபதம் என்ற வார்த்தைமேலுள்ள கவர்ச்சியால் செய்யப்படுபவை இவை என நினைக்கிறேன்


பொதுவாக இவற்றுக்கு ஒரு கலைநிகழ்ச்சிகளின் கலையமைதி உண்டு. இந்தச்சடங்கே கேனத்தனமாகத் தெரிகிறது. என் அபிப்பிராயத்தில் இன்றைய நிலையில் கேரளத்துக்கு வெளியே தாந்த்ரீகபூசைகள் எல்லாமே டுபாக்கூர்தான். ஏனென்றால் அவற்றுக்கான மரபுத்தொடர்ச்சியே அறுந்துவிட்ட்ருக்கிறது


ஜெ

https://www.youtube.com/watch?v=RsmAgYMN_wA