Tuesday, February 7, 2017

இனிது இனிது.



குஸ்மிதன் முன் பின்னாக குட்டிக்கரணம் அடித்து, காலத்துள் முன் பின்னாக சென்று பார்க்கிறான்.  மிக முக்கிய சித்திரம் அவன் தன்னை பாரத காவியத்தின்  [சிதறி வெளியில் விழுந்த] கதாபாத்திரம் ஒன்றாக கண்டு திடுக்கிடுவது. அவனாலேயே மீண்டும் அதற்குள் நுழையமுடியவில்லை . உரைகள் வழியே [என் நோக்கில் மொழிபெயர்ப்புகள் வழியே]  அந்த நூல் கல்லறை போல மூடப்பட்டு கிடக்கிறது. 

நீலத்தில்  பாலகிருஷ்ணன் தோழனுடன் வெண்ணெயில் வழிக்கி விழுந்து விளையாடும் அழகுக்கு இணையானது தேன் வழியும் உடலுடன் பீமன் ,அர்ஜுனனை தூக்கி சுழற்றி விளையாடும் சித்திரம்.

தேவியும் பார்த்தனும் நோக்கிக்கொள்ள,தம்பிகள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி  நோக்க கிளம்புகிறார்கள். நகுலன்தான் அய்யோக்கியப்பயல் [பாம்பின்கால் பாம்பறியும்] அவன் அயோக்கியன் குஸ்மிதன் என்ன செய்கிறான் என கவனிக்கப் போகிறான். [  குஸ்மிதன் வேளை கெட்ட வேளையில் முன்புறமாக குட்டிக்கரணம் அடித்து தொலைத்தால் என்னாவது?]

கடலூர் சீனு