Tuesday, April 25, 2017

இருவர்






ஜெ

சாயைக்கும் பாஞ்சாலியின் மாயைக்கும் உள்ள தொடர்பை கவனித்துவருகிறேன். துர்க்கைதேவியின் தோழி மாயை.மாயையும் தேவிதான். நாம் லௌகீகமாக உழல்கையிலே பார்ப்பது உண்மையில் தேவியின் மகாமாயா தோற்றத்தைத்தான். முக்தி அடைந்தவரே தேவியை காணமுடியும். சாயை என்றால் நிழல். அதுவும் இதே அர்த்ததில்தன் பயன்படுத்தப்பட்டுள்ளது இல்லையா?

பாஞ்சாலி நகர்நுழையும் காட்சியின் நுணுக்கமான ப்ரீக்வல் போல தேவயானி நகர்நுழைவதும் இருந்தது. அது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. தேவயானி கதை ஏன் இத்தனை நீளமானதாக வருகிறது என்றால் அது பாஞ்சாலியேதான் என்பதுதான் காரணம்

சண்முகம்