Tuesday, May 9, 2017

வேட்டைப்பொருட்கள்.





ஜெ
மாமலரை தொகுத்துக்கொள்ளும்போது ஆண்கள் எல்லாருமே நிலத்தையும் பெண்ணையும் வேட்டையாடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பெண்கள் அவர்களின் வேட்டைப்பொருட்கள். ஆனால் அப்படி அந்நிலையிலேயே அவர்கள் ஆண்களை ஆட்டிப்படைக்கிறார்கள். அதுதான் காமம் காதல் எல்லாமே

நாவலின் தொடக்கத்திலேயே தாரையின் கதை வருகிறது. பிள்ளையைப்பெற்றதுமே தாரை விடுதலை அடைந்துவிடுகிறாள். திமிராக நிமிர்ந்துவிடுகிறாள். இதுதான் ஆண்களை கடைசியாக பெண்கள் ஜெயிக்கும் இடம் என்னும் எண்ணம் வந்தது.

அதிலிருந்து தொட்டுத்தொட்டு தேவயானியின் கதை வரை வரும்போது அன்னையாக ஜெயித்த பெண்கள் மற்ற விஷயங்களில் ஈடுபட்டு தோற்ற பெண்கள் என்னும் பிரிவினையை உருவாக முடிந்தது\

ஆனால் அன்னையாக இருந்ததனாலேயே அழிந்த ஹுண்டனின் மனைவியர்களின் கதையும் நடுவே ஞாபகம் வந்தது

செந்தில்வேல்