Tuesday, June 20, 2017

எழுத்தின் நடனம்



அன்புள்ள ஜெ,

உத்தரைக்கு பிருகந்நளை கற்றுத்தரும் நடன வகுப்பு முக்தன் அழைத்ததும் அவள் கதவைத் திறக்கும்போதே தொடங்கிவிடுகிறது. எதையும் காட்சிப்படுத்த, வேறெந்த ஊடகத்தின் துணையும் இல்லாமல் மொழியால் முடியும் என்பதை இதுவரை வெண்முரசு மெய்ப்பித்து வந்தது. 

'You should see the music and hear the dance" - அலர்மேல்வள்ளி தன் குரு சொன்ன ஆப்த வாக்கியமாக இதை எப்போதும் சொல்வார். இன்று எழுத்தை நடமிடவைக்க முடியும் என்றும் நடனத்தை எழுத்தாக்க முடியும் என்றும் மெய்ப்பித்து புலன்மயக்குக்கு புதிய சான்றொன்றை படைத்திருக்கிறீர்கள்.

அற்புதம்!
 
ஸ்ரீனிவாசன்