Sunday, June 18, 2017

"பிரயாகை "

 
 
அன்புள்ள  ஆசானுக்கு ,
         
நலம்  தானே , உங்கள்  பயணம்  எல்லாம்  இனிதே  முடிந்ததா?.விஷ்ணுபுரம்  முடித்துவிட்டு  சரி  அடுத்தது  பிரயாகை  ஆரம்பிக்கலாம்  என்று ஆரம்பித்தேன். வெண்முரசு  நாவல் வரிசையில்  பிரயாகை தான் அதிக  பக்கம்  கொண்டது  என்று நினைக்கிறேன் சுமார் 1100 பக்கங்கள் . எப்படிதான் உங்களால் இவ்வளவு எழுத முடிகிறதோ,  நீங்கள் எழுதும் வேகத்திற்கு  என்னால் படிக்க முடியுமா  என்று  ஒரு ஐயம்  அதனால் தான்  நீர்க்கோலமும்  படிக்க ஆரம்பித்து  விட்டேன்.
       
 பிரயாகை  கங்கையின்  ஐந்து  நதிகள்  சந்திக்கும்  இடம் என்ற  உங்கள் விளக்கம் ,உங்களின்  கதைகளின்  தலைப்பே  என்னை  எப்போதும்  ஒரு கிளர்ச்சிக்குள்  ஆக்கும் .
     
 சிறு  சிறு  வஞ்சங்கள்  எல்லாம்  ஒன்று  சேர்ந்து  ஒன்றாக  ஆகி  பெருகுகிறது, இந்த  நாவலில் . வஞ்சங்கள்  இல்லாம்  மகாபாரதம் இல்லை,  மகாபாரத  பாத்திரங்களின்  மன  ஆழங்கள்  வரை  சென்று  விட்டீர்கள். மனதின்   கீழ்மையை  வர்ணிக்கும்  போது  தாஸ்த்தோவஸ்கி  போல  எனக்கு  தெரிந்தது. நீங்கள்  டால்ஸ்டாய்  போலவும்  எழுதி  இருக்கலாம்  நான் இன்னும்  டால்ஸ்டாய்  படைப்புகளை  படிக்க வில்லை  ஆதனால்  எனக்கு  தெரியவில்லை . மகாபாத்திர பாத்திரங்களின்  மனதை இதை விட  யாரும்  விரிவாக  ஆரய்ந்து  எழுத முடியுமா  என்று  தெரியவில்லை.
        
பின்  நிறம் , கருமையை  பற்றிய வர்ணனைகள்  முடிவில்லாமல்  சென்று கொண்டே  இருக்கிறது .திரௌபதி, கிருஷ்ணன்  இரண்டு  பேரின் கருமையையும்  வேறு  வேறு  மாறி  வர்ணித்து  இருந்தீர்கள் ,நீர்க்கோலமும்  படித்துக்  கொண்டு  இருந்ததால்  அங்கு  நளனின்  கருமையை  வேறு  மாறி  கட்சி தந்து  இருந்தீர்கள்  கருமையை  முடிவில்லாமல்  மாற்றி  மாற்றி  பல  கோணங்களில்  சொல்லி  செல்கிறீர்கள், வியப்புதான் . 
        
நாம்  பல வாராக கேட்டு இருக்கும்  அசாதாரண  கதைகளை  சூதர்பாடல்களில்  விளக்கிவிட்டீர்கள். 
     
திரௌபதியின்  பார்வையில்  அனைவரையும்  காட்டிவிட்டீர்கள், கர்ணன் , துரியன் , பீமன் , பார்த்தன் , தர்மன் , கிருஷ்ணன்.  நகுல சகாதேவன்  ஆவளுக்கு  குழந்தைகள் போல  தான் .
 
ஆனால்  ஒரு  சின்ன  கேள்வி  நீங்கள் திரௌபதியின்  பார்வையில்  அஸ்வத்தாமனை  காட்ட  வில்லையே, அவனும்  சுயம்வரத்திற்கு  வந்து  இருகிறான் , அவனும்  சிறந்த  வில் வீரன்    தான் , அவனை  நீங்கள்  பெரிதாக  அங்கு பதிவு  பன்னவில்லையே  ஏதேனும்  காரணம்  உண்டா ? என்  சிறு அறிவுக்கு  அது  எட்ட வில்லை என்று நினைக்கிறேன். மனிக்கவும் 
      
 நாவல் என்னை  மிகவும்  ஈர்த்து விட்டது , ஓவியங்கள்  சொல்வே  வேண்டாம்  மிகவும் அற்புதம். அடுத்து  வெண்முகில்  நகரம்  வாங்க  பதிவு  பன்னிவிட்டேன்  படித்து விட்டு  எழுதுகிறேன் .  
        
நன்றி 
இப்படிக்கு ,
உங்கள்  மாணவன் , 
பா.சுகதேவ் .