Sunday, June 4, 2017

ஒக்கலில்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

"நீர்க்கோலம் - 8" இல் இப்படி ஒரு வரி வருகிறது."தொல்புகழ் தேவயானி யயாதியை தன் மைந்தனென ஒக்கலில் வைத்திருந்தாள் என்கின்றன நூல்கள்".ஏற்கனவே நீங்கள் "ஒக்கலை"யின் புகழ் பற்றி ஒரு தனி கட்டுரையே நமது தளத்தில் எழுதியிருப்பதை இப்போதுதான் படித்தேன்! - ஒக்கலை ஏறிய உலகளந்தோன் - அந்தக்கட்டுரையில்..  "பல தஞ்சை வட்டார வழக்குச் சொற்களைக் கேட்டு நான் உவகை கொண்டதுண்டு. அதில் ஒன்று ‘ஒக்கில’ என்பது" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்,ஆனால் நம்மாழ்வார் அவதரித்த எங்களூரிலும் (ஆழ்வார்திருநகரி-தூத்துக்குடி மாவட்டம்)இன்றும் இந்த வார்த்தை வெகு சரளமாக மக்களின் புழக்கத்தில் உள்ளது.

 நம்மாழ்வாரின் அந்த குறிப்பிட்ட 'பாசுரத்தை' நீங்கள் விளக்கிய விதமும் மனதை எங்கெல்லாமோ கொண்டு செல்கிறது!.

அன்புடன்,
அ .சேஷகிரி.