Thursday, July 13, 2017

குலக்கதைகள்






ஜெ

இப்போதுதான் மழைப்பாடலை வாசித்து முடித்தேன். விரிவாக எழுதவேண்டும். என்னால் விமர்சனமாக எழுத முடியாது. அதிலுள்ள டீடெயில்களை எண்ணி எண்ணி ஆச்சரியப்படுகிறேன். இரண்டுவகையான டீடெயில்கள். ஒன்று பல்வேறுகுலக்கதைகள்இன்னொன்று நிலம் இந்நாவலை நான் இப்படி வாசிக்கக் காரணமே நிலம்தான். கண்ணெதிரே நிலம் வந்து விரிகிறது. அங்கே வாழும் அனுபவம் கிடைக்கிறது. மற்றகதைகள் அரைப்பக்கத்தில் சலிப்பூட்டும்போது இந்தக்கதை அப்படியே வாழ்ந்துவிட வைக்கிறது. போதாதுபோதாது என நினைக்கவைக்கிறது



காந்தாரத்தின் கதையும் யாதவர்களின் கதையும் ஒன்றுடன் ஒன்று அழகாக முடையபட்டுள்ளன. ஒரே சோர்ஸ் கொண்டவை. ஆனால் பாலைவனம் ஒன்று .ஒன்று புல்வெளி. மகாபாரதப்போரே இரண்டு நிலங்களின் போர்தான். அதை ஒன்று காற்றுநிலம் ஒன்று மழைநிலம் என அழகாகச் சொல்கிறீர்கள். அதிலுள்ள அந்த ஒருமையை எண்ணி எண்ணி எப்படி இப்படி ஒருபார்வை சாத்தியம் என்ரே நினைத்துக்கொள்கிறேன். நான் அறிந்த மகாபாரதம் மொத்தமாகவே மாறிவிட்டது

எம்.குமாரசாமி